அடுத்த போட்டிக்குள் சி.எஸ்.கே அணி மாற்ற வேண்டிய 5 விஷயங்கள் – விவரம் இதோ

CSK-1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலும் அடுத்து நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் இடையே தோல்வியை தழுவியது. இதன் காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட 5 முடிவுகளை தற்போது பார்ப்போம்.

அணியின் துவக்க கட்டமைப்பை மாற்ற வேண்டும் தற்போது முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாடி வருகிறார்கள். ஆனால் சரியாக விளையாடவில்லை அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் மற்றும் டுப்லஸ்ஸிஸ் ஆகியோர் ஆடினால் அது சென்னை அணிக்கு சரியாக இருக்கும்.

இந்த போட்டியில் ராயுடு கண்டிப்பாக அணிக்குள் வர வேண்டும். அவருக்கு பதிலாக முரளிவிஜய் அணிக்கு வெளியே உட்கார வேண்டும். அதே நேரத்தில் சரியாக ஆடாமல் இருக்கும் துவக்க வீரர் ஷேன் வாட்சன் கழற்றிவிடப்பட்ட அவருக்கு பதிலாக டுவைன் பிராவோ ஆடினால் மிகவும் சரியாக இருக்கும்.

Bravo

அனைவரும் கடந்த பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல் மகேந்திர சிங் தோனி 4 அல்லது 5 ஆவது இடத்தில் ஆடவேண்டும். இப்படி ஆடினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலான போட்டிகளை வெற்றி பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

- Advertisement -

Kedar-Jadhav (1)

கேதர் ஜாதவ் எந்த வேலையையும் சரியாக செய்ய அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா ஆடலாம். இது போன்ற மாற்றங்களை செய்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது.