சி.எஸ்.கே அணி இந்த 3 விஷயத்தை சரியா பண்ணாதான் இனிமே ஜெயிக்க முடியும் – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி இருந்தாலும் அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வி அடைந்து தற்போது புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக பார்க்கப்படுவது யாதெனில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் ஆகியோரது விலகல் தான் என்று கூறப்படுகிறது.

Rayudu 3

மேலும் இடையில் இரண்டு போட்டிகளில் விளையாடாத ராயுடுவும் அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். இந்நிலையில் ராயுடு மற்றும் பிராவோ ஆகியோர் கடந்த போட்டியில் மீண்டும் அணியில் இணைந்து அணிக்கு பலமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த போட்டியில் சென்னை அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது போட்டியாக இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை துபாய் மைதானத்தில் சந்திக்கிறது.

- Advertisement -

இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியிலாவது சென்னை அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டுமெனில் இந்த மூன்று விடயங்களை கட்டாயம் செய்தாக வேண்டும் என்பதை நாம் இங்கு கணிப்பாக கொடுத்துள்ளோம்.

faf

அதன்படி துவக்க வீரர்களாக வாட்சன் மற்றும் டு பிளிசிஸ் ஆகியோர் விளையாடும் பட்சத்தில் நிச்சயம் அவர்கள் பவர் பிளேயில் அதிரடியாக துவக்கத்திலேயே அதிக ஸ்கோர்கள் குவிக்க வேண்டும். அப்போதுதான் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்களுக்கு நம்பிக்கை பெற்று அவர்கள் அதே போன்ற அதிரடியாக விளையாட வார்கள் இது இரண்டாவது விடயமாக பார்க்கப்படுகின்றது.

CSK

மூன்றாவது தேவையற்ற பீல்டிங் மிஸ்டேக் செய்வது, கேட்சிகளை தவிர விடுவது, நோபால் வீசுவது ஆகிய தவறுகளை தவிர்த்தால் நிச்சயம் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்பதை நாம் இந்த பதிவில் கணித்து உள்ளோம். மேலும் மீண்டும் சென்னை அணி வெற்றிபெற்று நல்ல பாதைக்கு திரும்புவதே ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement