சி.எஸ்.கே அணி இந்த தவறுகளை சரி செய்தால் மட்டுமே இன்றைய போட்டியில் ஜெயிக்கும் – விவரம் இதோ

csk

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் தோற்று எட்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை எட்டாவது இடத்தில் இருப்பது அந்த அணியின் ரசிகர்கள் கவலையை அளித்திருக்கிறது.

cskvssrh

முதல் போட்டியில் மும்பை அணியுடன் வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் என இரண்டுமே சரியாக செயல்படாது தான் இதற்கு காரணம். மேலும் முந்தைய சீசனில் நன்றாக விளையாடிய வீரர்கள் இந்த முறை சரியாக விளையாடவில்லை.

ஷேன் வாட்சன் தற்போது வரை தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருக்கிறார். துவக்க வீரர்கள் எப்போதும் சொதப்பி கொண்டேதான் இருக்கின்றனர். அம்பத்தி ராயுடு மற்றும் பாப் டு பிளசிஸ் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவிற்கு ஆடி வருகிறார்கள். அணியில் எந்த ஒரு வீரரும் சரியான ஒரு ஆட்டத்தை காட்டவில்லை. மேலும் அணியில் ஆறு பந்து வீச்சாளரும் இல்லை 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

எகனாமி பவுலர் என்று அறியப்படும் ஜடேஜா ஒவ்வொரு ஓவரிலும் 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஹைதராபாத் அணியும் இதே நிலைமையில் தான் இருக்கிறது.

- Advertisement -

Jadeja

அந்த அணியும் 3 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இந்த இரண்டு அணிகளுக்குமே இன்று சிக்கல் இன்று எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி எட்டாவது இடத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும். இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் தவமாய் தவமிருந்து வருகிறார்கள்.