- Advertisement -
ஐ.பி.எல்

ரவீந்திர ஜடேஜா சி.எஸ்.கே அணியை விட்டு வெளியேறினால் நிச்சயம் அந்த அணிக்காக தான் விளையாடுவாராம் – விவரம் இதோ

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 240 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சென்னை அணியின் முக்கிய நட்சத்திர ஆல்ரவுண்டராக இருக்கும் ஜடேஜா சி.எஸ்.கே பல்வேறு வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

வெளியேறும் ஜடேஜா :

அதிலும் குறிப்பாக 2023-ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் விளாசி சென்னை அணியை ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்ற வைத்தவர் ஜடேஜா தான்.

- Advertisement -

இருப்பினும் தற்போது 35 வயதாகும் ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு முன்பு போல் பிரகாசமாக இல்லை என்பதனால் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே அணி கழட்டி விடவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சி.எஸ்.கே இனி இளம் வீரராகளுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக தெரிகிறது.

அப்படி சிஎஸ்கே அணி அவரை அணியிலிருந்து வெளியேற்ற நினைத்தால் அதற்கு முன் தானாகவே அவர் அணியிலிருந்து வெளியேறுவார் என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் சற்று சுமாரான அட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா கரியரின் கடைசி காலகட்டத்தை எட்டிவிட்டார்.

- Advertisement -

எனவே இனி விளையாடப்போகும் சில ஆண்டுகள் அவரது சொந்த மாநிலமான குஜராத் அணிக்காக விளையாட அவருக்கு விருப்பமுள்ளதாக தெரிகிறது. அதன் காரணமாக ஒருவேளை அவர் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறினால் நிச்சயம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்று தான் விளையாடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : துலீப் கோப்பையில் ஜடேஜா உட்பட 3 வீரர்கள் விலகல்.. ருதுராஜ் அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர்கள் அறிவிப்பு

ஏற்கனவே கடந்து 2022-ஆம் ஆண்டு ஜடேஜா சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட வேளையில் அவரது கேப்டன்சி பெரிய அளவில் எடுபடவில்லை என்பதனால் கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்ட அவர் தொடர்ச்சியாக ஒரு முழுநேர ஆல்ரவுண்டராக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -