முதலில் பாசிட்டிவ். இப்போ நெகட்டிவ் சி.எஸ்.கே அணியின் சோதனையில் ஏற்பட்ட குழப்பம் – விவரம் இதோ

kasi

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நேற்று நடைபெற இருந்த போட்டி கூட கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியை சேர்ந்த இரு வீரர்களுக்கு கொரோனா வந்துள்ள நிலையில், நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மற்றொரு நாளில் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது.

KKRvsRCB

கொல்கத்தா அணி வீரர்களை போல சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் 3 பேருக்கு கொரோனோ பாசிடிவ் என வந்த செய்தி அனைத்து சென்னை ரசிகர்களையும் அச்சுறுத்தி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் டெஸ்டில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன், பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி மற்றும் சென்னை அணி நிர்வாகத்தின் பேருந்தை சுத்தம் செய்யும் ஊழியர் உட்பட 3 பேருக்கு கொரோனோ பாசிடிவ் என முடிவு வந்தது. இந்த செய்தியை சமூக வலைதளங்களில் உடனடியாக பரவ தொடங்கியது. அனைத்து சென்னை ரசிகர்களையும் இந்த செய்தி அச்சுறுத்தியது.

இன்று அந்த மூன்று பேருக்கும் ராப்பிட் ஆன்டிஜன் எனப்படுகிற பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையின் அடிப்படையில் அவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா ஒன்றும் இல்லை என்கிற முடிவு வந்தது. மேலும் சென்னை அணி நிர்வாகத்தில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்கள் அனைவருக்குமே அதேபோல் கொரனோ இல்லை என்கிற முடிவு வந்தது.

Balaji-3

இந்த செய்தியை சென்னை அணியின் உரிமையாளர் காசி விசுவநாதன் சில மணி நேரங்களுக்கு முன்னர் கூறினார். மேலும் கொரனோ பரிசோதனை சரியாக நடத்தப்படவில்லை என்றும் அதன் காரணமாகவே முடிவுகள் மாறி மாறி வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்கிற முடிவு வந்திருக்கிறது.

- Advertisement -

Balaji

இருப்பினும் ஒரு சில நாட்களுக்கு பல பரிசோதனை எடுக்கப்பட்டு பின்னர, இறுதியான முடிவு வந்தவுடன் சென்னை அணி அதனுடைய அடுத்த போட்டியில் விளையாடும் என்று கூறப்படுகிறது. அதுவரையில் சென்னை அணியில் இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.