சி.எஸ்.கே அணியின் முக்கிய அதிகாரிக்கு இடைக்கால தடைவிதித்து அதிரடி காட்டிய நிர்வாகம் – விவரம் இதோ

csk
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் நடைபெற்று வரும் இந்த தொடர் இந்த ஆண்டு பதின்மூன்றாவது சீசனாக கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்தது.

Ipl cup

- Advertisement -

ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் இரு முறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தொடர் வெளிநாட்டில் நடை பெறலாம் அல்லது காலி மைதானத்தில் நடைபெறும் என ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் அவை அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பி.சி.சி.ஐ தரப்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த தொடரானது வரும் செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் நிச்சயம் இந்த தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்ததால் இந்த நடைமுறை தற்போது கையாண்டு வருகின்றனர்.

mathu

இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் மது தொட்டபிளில் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவராக மது தொட்டபிளில் உள்ளார் மேலும் விளையாட்டு சார்ந்த மருத்துவ நிபுணராக உள்ளார்.

Mathu 1

இந்நிலையில் மது தொட்டபிளில் சர்ச்சைக்குரிய விதத்தில் அவர் இந்திய ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் உயிர் நீத்தது குறித்து சர்ச்சையான கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த சூழலில் அந்த பதிவு தவறான கருத்தை வெளிப்படுத்தியதாகவும் அதன் காரணமாக அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement