கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 13வது ஐபிஎல் சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்ததில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. 13வது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் தான் சிஎஸ்கே அணி முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக என்னவென்றால் சிஎஸ்கே வீரர்களுக்கு வயதாகியதும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா அணியிலிருந்து விலகியதும் தான். 34 வயதான சுரேஷ் ரெய்னா 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனியுடன் இணைந்து சர்வதேச விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னா 13வது ஐபிஎல் சீசனில் விளையாடுவதை பார்ப்பதற்காக அனைவரும் காத்திருந்தனர். ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை.
13 வது ஐபிஎல் சீசன் விளையாட ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த சுரேஷ் ரெய்னாவிற்கு பால்கனி இல்லாத அறை ஒதுக்கப்பட்டதால் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார் என்ற ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. சுரேஷ் ரெய்னாவிற்கு ஐபிஎல் தொடருக்கு என்றே தனியாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இது ரசிகர்களிடம் மாபெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இனிமேல் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட மாட்டார் என்று பேசப்பட்டது. இந்தப் பிரச்சினை காரணமாக சுரேஷ் ரெய்னாவை அணியிலிருந்து முற்றிலும் நீக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. அது மட்டும் அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா சென்னை தவிர்த்து மற்ற அணிகளில் விளையாடுவதாக பேசப்பட்டது.
தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு சமீபத்தில் நைட் கிளப் ஒன்றில் கைதான ரெய்னா குறித்து சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளது. அப்போது அவர் கூறியபோது “சுரேஷ் இன்னும் சிஎஸ்கே அணியில் தான் இருக்கிறார். அவர் இன்னும் அணியில் இருந்து வெளியேறவில்லை, அவரை பிரியும் எண்ணமும் எங்களிடம் இல்லை” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.