சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா. சி.எஸ்.கே அணிக்குள் கொரோனா பரவியது எப்படி – விவரம் இதோ

csk
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21ம்தேதி தங்களது ஒட்டுமொத்த அணியுடனும் துபாய் சென்றது. ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் யார் யார் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

csk 1

- Advertisement -

இந்நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சிஎஸ்கே நிர்வாகி அளித்த தகவலின் படி : சென்னை அணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய இந்திய வீரர் ஒருவருக்கும், மூத்த நிர்வாகி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை பேருக்கு கொரோனா பாதித்தது என்று எனக்கு முழுமையாகத் தெரியாது. முழுத்தகவலும் கிடைத்த பின்னர் நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

கடந்த வியாழக்கிழமை இரவு ஜூம் வீடியோ கூட்டம் நடைபெற்றது அப்போது சென்னை அணியினருக்கு கொரோனா இருப்பது பற்றி அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான வீரர் மற்றும் ஊழியர்கள் லேசான அறிகுறிகளுடன் மட்டுமே தென்பட்டனர் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது வெளியான தகவலின் படி மூத்த அதிகாரிக்கும் அந்த வேகப்பந்து வீச்சாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை அணி மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது செப்டம்பர் 1 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப் பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

csk 2

ஏற்கனவே சென்னை அணியின் உரிமையாளர் துபாயில் தாஜ் ஹோட்டலில் கடந்த 21ம் தேதி முதல் தங்கியுள்ளார். இந்த ஒரு வார காலம் முடிந்ததும் வீரர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த செய்தி வெளியானது. சென்னை அணி வீரர்கள் துபாய் புறப்படுவதற்கு முன்னர் சேப்பாக்கத்தில் ஆகஸ்ட் 15 முதல் 20 ஆம் தேதி வரை பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியில் கேப்டன் தோனி, தீபக் சாஹர், கரண் ஷர்மா, முரளி விஜ, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகிய வீரர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

மேலும் இவர்களுடன் பந்து வீசுவதாக நெட் பவுலர்ஸ் சிலரும் சி.எஸ்.கே வீரர்களுடன் துபாய் பயணித்துள்ளனர். வீரர்களின் பாதுகாப்பை முடிந்த அளவு உறுதி செய்த பிறகே பயிற்சி தொடரப்படும் என்றும் கொரோனா பாதித்த அந்த வேகப்பந்து வீச்சாளர் விமான பயணத்தின் போது மற்ற வீரர்களுடன் நெருக்கமாக இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

csk 3

இருப்பினும் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் தான் கிடைத்தது. ஆனால் துபாய் வந்த பிறகே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற வீரர்களுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் பல தகவல்களை அவர் தெரிவித்தார்.

Advertisement