ரெய்னாவிற்கு பதிலாக சி.எஸ்.கே அணியின் துணைக்கேப்டனாக செயல்பட இருப்பவர் யார் தெரியுமா ? – விவரம் இதோ

Raina

இந்த வருட ஐபிஎல் தொடர்பான அறிவிப்புகள் வெளியானதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு பிரச்சினைகள் மேல் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அதாவது துபாய் வந்து இறங்கியதும் சிஎஸ்கே அணி வீரர்கள் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 13 பேருக்கு கொரோனா என்ற முதல் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதிலும் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாடு ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதால் சிஎஸ்கே அணியில் விளையாட இருந்த போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது.

Raina-1

அதனை தொடர்ந்து ரெய்னாவும் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் ஆன மனக்கசப்பு காரணமாக துபாயில் இருந்து இந்தியா திரும்பினார். முதலில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பினார் என்று கூறப்பட்டாலும் பின்னர் அவருக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் இந்தியா திரும்பினார் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவதாக ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அதற்காக முயற்சி செய்தும் வருகிறார் பயிற்சியாளர் மற்றும் தோனி ஆகியோரிடம் மீண்டும் அணியில் இணைய அவர் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் ரெய்னா இந்த வருடம் விளையாட வில்லை என்றால் அவருக்கு பதிலாக யார் சிஎஸ்கே அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் கள் என்று கேள்வி ரசிகர்களிடையே அதிக அளவில் எழுந்துள்ளது.

raina

மேலும் ரசிகர்கள் இந்த கேள்வியை சமூக வலைத்தளத்தில் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கேள்விக்கு பதிலளித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம் “வைஸ்” கேப்டன் இருக்கும்பொழுது “வைஸ்” கேப்டன் சிஎஸ்கே அணிக்கு எதற்கு ? என்று சுவாரசியமான ஒரு பதில் அளித்துள்ளது. அதாவது ஆங்கிலத்தில் “வைஸ்” என்றால் தனித்துவமான விவேகமுள்ள என்று ஒரு பொருள் உண்டு அத்தகைய வீரரான தோனி இருக்கும் போது சென்னை அணிக்கு துணைக்கேப்டன் எதற்கு என்பது போல விளக்கம் அளித்துள்ளது.

- Advertisement -

Watson

ஆனாலும் தோனி கேப்டனாக செயல்படும் பட்சத்தில் ரெய்னா இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்றால் அவருக்கு பதில் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் அல்லது தென்ஆப்பிரிக்கா வீரர் டூப்பிளிசிஸ் ஆகிய இருவரில் ஒருவர் துணை கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.