பயிற்சிக்காக சென்னை வரும் தோனி அன்ட் கோ. என்னைக்கு தெரியுமா ? – விவரம் இதோ

Dhoni-Csk
- Advertisement -

நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஐபிஎல் தொடரில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பது உறுதியாகி உள்ளது. துபாய், சார்ஜா, அபுதாபி போன்ற மூன்று மைதானங்களில் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று மைதானங்களில் மட்டுமே மொத்தம் 60 போட்டிகளும் நடைபெறும்.

ipl

- Advertisement -

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் போன்ற பல அணி வீரர்கள் தனியாக தங்களது இல்லத்திலேயே பயிற்சியை துவக்கி விட்டார்கள் . மேலும் ஆகஸ்ட் 20ம் தேதி அனைத்து அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், வேலையாட்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவரும் துபாய் செல்ல உள்ளார்கள் அங்கு சென்று பயிற்சியை துவக்க இருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஒருவாரம் பயிற்சி எடுக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் இதற்காக சென்னை அணி நிர்வாகம் தமிழக அரசின் அனுமதி பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை வரும் சி.எஸ்.கே வீரர்கள் 15 ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

Dhoni

இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஹர்பஜன்சிங், பியூஷ் சாவ்லா மற்றும் சில வீரர்கள் சென்னையில் ஒன்றிணைந்து இந்த பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர். வீரர்கள் சென்னைக்கு வந்தாலும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

ஏனெனில் அவர்கள் சென்னை வருவதற்கு முன் இரண்டு முறை கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டு நெகட்டிவ் ரிசல்ட் காண்பித்தால் மட்டுமே இங்கே வர முடியும். இதனால் வீரர்கள் இங்கு வருவதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் ஹோட்டல் அறையில் இருந்து மைதானத்திற்கு செல்ல வேண்டும்.

Dhoni

பின்னர் மைதானத்திலிருந்து ஹோட்டல் அறைக்குத் திரும்ப வேண்டும். வழியில் எங்கும் செல்லக் கூடாது, தங்கவும் கூடாது என்று உத்தரவு வீரர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. சென்னையில் இருக்கும் போதும் வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர்தான் துபாய் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement