சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 2 முக்கிய மாற்றங்களை செய்த தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

கடந்த 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 22 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பெங்களூரு அணி முதலிடத்திலும், சென்னை அணி இரண்டாவது இடத்திலும் புள்ளிப் பட்டியலில் இருக்கின்றன. இந்நிலையில் இன்று தற்போது துவங்கியுள்ள 23 ஆவது போட்டியில் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான அணியும் மோதுகின்றன.

cskvssrh

- Advertisement -

அதன்படி தற்போது டாஸ் போடப்பட்டு முடிந்த நிலையில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்துள்ளார். அதன்படி தற்போது சென்னை அணி முதலில் பந்து வீசி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான சென்னை அணியில் தோனி இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளார்.

அதன்படி கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக டுவைன் பிராவோ வெளியேற்றப்பட்டுள்ளார். அதேபோன்று அணியில் மற்றொரு மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நெகிடிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இம்ரான் தாஹிர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மற்றபடி சென்னை அணியில் வேறு எந்த மாற்றங்களும் கிடையாது. சன் ரைசர்ஸ் அணியும் இந்த போட்டியில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அவர்கள் அணியில் சந்தீப் ஷர்மா மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் அணிக்குள் இணைந்து இருக்கின்றனர். இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற கடுமையாக போராடும் என்பதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக அமைய பெரிய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் இதோ :

கெய்க்வாட், டூபிளசிஸ், மொய்ன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், லுங்கி நெகிடி.

Advertisement