இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்கு முன்னதாக வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என ஐசிசி நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
சி.எஸ்.கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம் :
அப்படி நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பு வீரர்களின் பட்டியலையும் வெளியிடும் பட்சத்தில் மீதமுள்ள தொகையை வைத்துக்கொண்டு மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் பங்கேற்பார்கள்.
அதேபோன்று இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக வீரர்களுக்கு இடையே டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்யவும் வாய்ப்பு இருப்பதால் அப்படியும் சில முக்கிய மாற்றங்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மினி ஏலத்திற்கு முன்னதாக மிகப்பெரிய டிரேடிங்காக சஞ்சு சாம்சனின் இடமாற்றம் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்துடன் இருக்கும் அதிருப்தி காரணமாக வெளியேற விரும்பும் சஞ்சு சாம்சனை மினி ஏலத்திற்கு முன்னதாகவே ட்ரேடிங் செய்ய பல்வேறு அணிகள் ஆர்வம் காண்பித்து வருகின்றன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலத்திற்கு முன்னதாக டிரேடிங் செய்ய விரும்புவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் அப்படி செய்திகள் வெளியான சில தினங்களிலேயே அந்த தகவல் அப்போது மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி : மீண்டும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் அணிக்குள் கொண்டு வர சி.எஸ்.கே அணி முடிவு செய்துள்ளதாகவும் அதன்படி சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் வரும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜாவை அவர்கள் வெளியேற்ற இருப்பதாகவும் சற்று உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையும் படிங்க : மேக்ஸ்வெல் வந்தாலே இது கன்பார்ம்.. வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சு குறித்து – சீக்கா ஸ்ரீகாந்த் பாராட்டு
இப்படி ஒரு மாற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிகழுமாயின் மஹேந்திர சிங் தோனி அடுத்த 2026 ஆண்டு ஓய்வு பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் தொடர்ந்து பயணிப்பார் என்பது உறுதி.



