ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை காணாத 2 மோசமான சாதனைகளுடன் பிளே ஆப் வாய்ப்பை இழந்த சி.எஸ்.கே – விவரம் இதோ

CSK
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதல் போட்டியை வெற்றிகரமாக துவங்கி இருந்தாலும் அதற்கடுத்து தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு காயம் ஏற்பட்டு அவர் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகும் நிலை ஏற்பட்டது.

ஐ.பி.எல் வரலாற்றில் 2 மோசமான சாதனைகளை சந்தித்த சி.எஸ்.கே :

இதனால் மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை தோனி கையில் எடுத்தார். அதன் பின்னர் தோனியின் தலைமையிலாவது சென்னை அணி எழுச்சி பெற்று மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது தலைமையிலும் சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து தற்போது பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பே இழந்துவிட்டது.

- Advertisement -

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாடியது. இந்த போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களை கூட பூர்த்தி செய்யாமல் 19.2 ஓவர்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களை மட்டுமே குவித்தது.

இதனால் 191 ரன்கள் என்ற இலக்கு பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட பஞ்சாப் அணி போட்டியின் துவக்கத்திலிருந்தே ஆதிக்கத்தை செலுத்தி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.

- Advertisement -

பஞ்சாப் அணிக்கு எதிராக பெற்ற இந்த தோல்வியின் மூலம் நடப்பு சீசனில் எட்டாவது தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி இரண்டு மோசமான வரலாற்று சாதனையுடன் இந்த பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பில் இருந்தும் வெளியேறியுள்ளது. அந்த வகையில் சென்னை அணி நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்து தோல்வியின் மூலம் தொடர்ச்சியாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர். இப்படி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை பெறுவது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.

இதையும் படிங்க : சிஎஸ்கே’வை நொறுக்கி நாக் அவுட் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சேவாக்கின் 17 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை

அதே போன்று கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத சென்னை அணி நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் இந்த நடப்பு 2025 பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிளே ஆப் வாய்ப்பை சிஎஸ்கே அணி தற்போது தான் முதல் முறையாக இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement