இலங்கையை சேர்ந்த 2 இளம் வீரர்களை ரிசர்வ் வீரர்களாக அணியில் இணைத்த சி.எஸ்.கே – விவரம் இதோ

CSK-1

ஐபிஎல் தொடர் என்று வந்துவிட்டாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் அனைத்து வருடமும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு இந்த அணி தகுதி பெற்றுவிடும். அப்படி இருக்க சென்ற வருடமும் இந்த அணி லீக் போட்டிகளிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. எனவே இந்த வருடம் அதிலிருந்து மீண்டு வந்து கோப்பையை கைப்பற்ற மிக அதிகமான வலைப் பயிற்சியுடன் தயாராகிவருகிறது.

வலைப்பயிற்சியில் தமிழக இளம் வீரர்கள் ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோர் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் சென்ற வருட நம்பிக்கை நட்சத்திரம் ருத்ராஜும் மிகத் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் சுரேஷ் ரெய்னாவை இந்த வருடம் தக்கவைத்துக்கொண்டு மட்டுமல்லாமல் ஏலத்தில் கிருஷ்ணப்ப கவுதம் , மோயின் அலி மற்றும் சட்டீஸ்வர புஜாரா போன்ற வீரர்களையும் வாங்கி அணியை பலப்படுத்தி இந்த வருடம் கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.

மேலும் அணியின் பலத்திற்கு பலம் கூட்டும் வகையில் இரண்டு இளம் வீரர்கள் மகேஷ் தீக்ஷனா மற்றும் மதீஷ பதிரனா ஆகியோரை ரிசர்வ் வீரர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரவழைத்துள்ளது. இதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர்கள் இருவரும் அணியின் ஸ்குவாட்டில் இல்லையென்றாலும் ரிசர்வ் பிளேயர்ஸ்ஸாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

pathirana

இவ்விரண்டு விரல்களும் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு சென்னை அணி மிகச்சிறந்த படைபலத்துடன் தோனி தலைமையில் ஐபிஎல் தொடரை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த 2 இளம் வீரர்களையும் நெட் பவுலராக சி.எஸ்.கே அணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Theekshana

கடந்த ஆண்டு ரெய்னா இன்றி தொடரில் பங்கேற்ற சி.எஸ்.கே அணி இம்முறை தோனி, ராயுடு, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, மெயின் அலி, சாம் கரண் என பலம்வாய்ந்த அணியாக களமிறங்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.