ஸ்ரீலங்காவை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியில் இருந்தும் 2 வீரர்களை அணியில் இணைத்த சி.எஸ்.கே – ஒரே அதிரடியா இருக்கு

csk

கடந்த ஆண்டு சரியாக விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு நன்றாக விளையாட வேண்டும் என்கிற முனைப்போடு அணிகளை காட்டிலும் முன்கூட்டியே தனது வலைப் பயிற்சியை தொடங்கி விட்டது.சென்னை சேப்பாக்கத்தில் வலைப்பயிற்சி மேற்கொண்டு வந்த சென்னை அணி தற்பொழுது மும்பைக்கு இடம் மாறி உள்ளது. வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத இருக்கின்றன.

CSK

அதுமட்டுமல்லாமல் சென்னை அணியின் முதல் 5 போட்டி போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளதால் சென்னை அணி முன்கூட்டியே மும்பைக்குச் சென்று தனது பயிற்சி முகாமை தொடங்கிவிட்டது.சென்னை பயிற்சி முகாமில் முன்னரே ஸ்ரீலங்காவை சேர்ந்த இரண்டு இளம் வீரர்கள் நெட் பவுலர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதனை அடுத்து மும்பைக்கு சென்று உள்ள சென்னை அணி மேலும் 2 இளம் வீரர்களை நெட் பவுலர்களை தங்கள் அணியில் இணைத்துக் கொண்டது.

நூர் அகமது மற்றும் பசல்ஹக் பரூக்கி ஆகிய இரண்டு இளம் ஆப்கானிஸ்தான் வீரர்களை சென்னை அணி தனது பயிற்சி முகாமில் இணைத்துக் கொண்டது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான நூர் அகமது மற்றும் வேகப்பந்து வீச்சாளரான பரூக்கி சென்னை அணியில் நெட் பவுலர்களாக இணைக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Fazalhaq-Farooqi

இந்நிலையில் இப்படி இளம் வீரர்களை சென்னை அணி நிர்வாகம் நெட் பவுலர்களாக தங்களது அணியில் சேர்த்துக் கொள்வது, சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் நன்றாக பந்துகளை எதிற்கொள்ளாவே என்று ஒருபக்கம் கூறி வருகின்றனர்.

- Advertisement -

fazalhaq

இவர்கள் வீசும் வெரைட்டியான பந்துகளை ஆடி பயிற்சி எடுத்துக் கொள்வதன் மூலம் வருகிற ஐபிஎல் லீக் தொடரில் பேட்ஸ்மேன்கள் மிக சுலபமாக எதிரணி பவுலர்களை மேற்கொண்டு நன்றாக விளையாட உதவும். எனவேதான் சென்னை அணி நிர்வாகம் இப்படிப்பட்ட விஷயங்களை செய்து வருகிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.