கடைசி இடத்தில் இருந்த சென்னை அணி இப்போ எத்தனையாவது இடத்தில் இருக்க தெரியுமா ? – புள்ளி பட்டியல் இதோ

CSK-1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.

cskvskxip

அதிகபட்சமாக கேப்டன் ராகுல் அதிகபட்சமாக 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். கடந்த நான்கு போட்டிகளாக துவக்க ஜோடி சோபிக்காத பட்சத்தில் இம்முறை வாட்சன் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்..

- Advertisement -

17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து சிஎஸ்கே அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடரை இரண்டாவது வெற்றியை பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் சி.எஸ்.கே பெற்ற வெற்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதாவது இப்போட்டி துவங்குவதற்கு முன்னர் கடைசி இடத்தில் இருந்து சென்னை அணி தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

points

மேலும் சென்னை அணியிடம் தோற்ற பஞ்சாப் அணி மொத்தம் நான்கு தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. 3 வெற்றிகளுடன் மும்பை முதலாவது இடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் டெல்லி, பெங்களூர் அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement