ஷிவம் துபே வீசிய அந்த ஓவர் தோல்விக்கு காரணமில்லை. சி.எஸ்.கே தப்பு பண்ணாதே இங்குதான் – நடந்தது என்ன?

CSK
- Advertisement -

சென்னை அணி நேற்று தங்களது 2-வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது. ஏற்கனவே கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியை தழுவியதால் நேற்றைய போட்டியில் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்பட்ட வேளையில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்து குவித்தும் தோல்வியைத் தழுவியது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதேவேளையில் சிறப்பாக விளையாடிய லக்னோ அணியானது இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

uthappa

- Advertisement -

நேற்றைய இந்த ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டாலும் பவுலிங் மற்றும் பீல்டிங்கில் ஏற்பட்ட குறை காரணமாகவே தோல்வியை சந்தித்தது என்று கூறலாம். ஏனெனில் சென்னை அணி வெற்றி பெறக்கூடிய ஒரு பெரிய டார்கெட்டை செட் செய்தும் போட்டியில் தோற்று இருக்கிறது என்றால் அதில் என்ன பிரச்சினை என்பதை தான் இந்த பதிவில் காண உள்ளோம். அந்தவகையில் சென்னை அணிக்கு பிரச்சினையாக அமைந்தது பந்துவீச்சில் மட்டும்தான்.

ஏனெனில் கடினமான இந்த இலக்கை சேசிங் செய்த லக்னோ அணி எளிதாக வெற்றி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் தற்போதைய பவுலர்கள் பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்தாததே மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. முன்னர் தீபக் சாகர், ஹேசல்வுட் போன்ற வீரர்கள் அணியில் இருந்ததால் பவர் பிளேயில் விக்கெட்டுகள் கிடைத்தன. ஆனால் தற்போது உள்ள பவுலர்கள் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த கூடியவர்களாக இல்லை. அதே போன்று ரன்களையும் அவர்கள் நேற்றைய போட்டியில் கட்டுப்படுத்த தவறிவிட்டனர்.

Dube

அதோடு மட்டுமின்றி சென்னை அணி போட்டியை தவறவிட்டது ஷிவம் துபே வீசிய 19-வது ஓவரில் தான் என்ற ஒரு பரவலான பேச்சும் இருந்து வருகிறது. ஏனெனில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரை வீசிய துபே 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதனால் இறுதி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் லக்னோ எளிதாக வெற்றியை பதிவு செய்தது. இதன் காரணமாக போட்டியின் திருப்புமுனை அந்த 19 ஓவர் தான் என்றும் துபே 19-வது ஓவரை வீசிய தான் தவறு என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் தோல்விக்கு முக்கிய காரணம் அது கிடையாது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஒரு பகுதி நேர பந்துவீச்சாளர் நேரடியாக 19-ஆவது ஓவர் வீசுவது என்பது கடினமான ஒன்று அதோடு 19-வது ஓவரை வீச வேறு யாரும் இல்லாத சூழலில் தான் அவர் கட்டாயத்தின் பேரில் வீச அழைக்கப்பட்டார். மேலும் சி.எஸ்.கே அணியில் பிராவோ வழக்கமாக 10 ஓவர்களுக்கு மேல் பிற்பகுதியில்தான் பந்து வீசுவார்.

Bravo

ஆனால் நேற்றைய போட்டியில் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை அதேவேளையில் ரன்களும் அதிக அளவில் ரன்களும் கசிந்தன. இதன் காரணமாகவே பிராவோ முன்கூட்டியே பந்துவீச வந்துவிட்டார். அதனால் அவரால் டெத் ஓவர்களில் பந்துவீச முடியாமல் போனது. பிராவோ டெத் ஓவர்களில் பந்து வீச வேண்டுமெனில் முன்கூட்டியே சில வீரர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : 210 ரன்கள் அடித்தும் நாங்கள் தோற்க இதுவே காரணம் – போட்டிக்கு பின்னர் வருத்தத்தை பகிர்ந்த ஜடேஜா

அந்த வகையில் தற்போது பவர் பிளேவில் பந்துவீசும் அளவிற்கு நல்ல பவுலர்கள் இல்லாததே தோல்வி காரணம் என்பதே நிதர்சனமாக உண்மை. கடந்த ஆண்டு தீபக் சாஹர், ஹேசல்வுட் போன்ற பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுத்து எதிர் அணிக்கு நெருக்கடி அளிப்பார்கள். ஆனால் அதைப் போன்ற ஒரு பௌலிங் அட்டாக் தற்போது சிஎஸ்கே அணியிடம் இல்லை என்பதே உண்மை.

Advertisement