ரெய்னாவுடன் சேர்த்து மற்றொரு வீரரின் கதையையும் முடிக்க தயாரான சி.எஸ்.கே நிர்வாகம் – விவரம் இதோ

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் பல மாதங்கள் கழித்து தொடங்கினாலும் ஐபிஎல் தொடரில் பல பிரச்சினைகளில் இருந்து கொண்டேதான் இருந்தது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு வீரர்களுக்கு கரோனா வைரஸ் வந்துவிட்டது. 

CSK-1

அதே நேரத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் வெவ்வேறு காரணங்களுக்காக அணியில் இருந்து வெளியேறினார்கள். இதில் ஹர்பஜன்சிங் தொடரில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்துவிட்டார். சுரேஷ் ரெய்னா துபாய் வரை வந்துவிட்டு ஒரு சிறிய பிரச்சினை காரணமாக இந்தியா திரும்பிவிட்டார்.

- Advertisement -

தற்போது வரை இந்த இருவரும் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுவார்களா என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தற்போது வரை இந்த இரண்டு வீரர்களுக்கும் மாற்று வீரர்களை சென்னை அணி அறிவிக்கவில்லை. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு வீரர்களின் பெயரையும் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியது.

Harbhajan

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா விற்கு வருடத்திற்கு 11 கோடி  ரூபாய் சம்பளமும், ஹர்பஜன் சிங்கிற்கு 2 கோடி ரூபாயும் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் விதிமுறைப்படி இந்த சீசன் உடன் 3 வருட ஒப்பந்தம் முடிய போகிறது.

Raina

இதன் காரணமாக இந்த இருவரின் ஒப்பந்தத்தையும் அடுத்த வருடத்திற்கு நீடிக்காமல் முறித்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சி.எஸ்.கே அணியின் முக்கிய காசி விஷ்வநாதனிடம் கேட்டபோது வாய் திறக்க மறுத்து விட்டார். இதன் காரணமாக இவர்கள் இருவரது ஒப்பந்தமும் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement