CSK vs MI, IPL 2021 : எப்படி ஆகப்போகுதோ என்று எதிர்பார்த்த நிலையில் அசத்தல் வெற்றி பெற்ற சி.எஸ்.கே – ரசிகர்கள் ஹேப்பி

cskvsmi-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய துவக்கத்திலேயே பவர்பிளே 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 24 ரன்களை மட்டுமே சிக்கி தவித்தது.

cskvsmi

- Advertisement -

இதன் காரணமாக சி.எஸ்.கே 20 ஓவர்கள் வரை தாக்கு பிடிக்குமா ? என்று எதிர்பார்த்த வேளையில் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் அபார ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை குவித்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கெய்க்வாட் 88 ரன்கள் குவித்தார்.

அதை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை 136 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சென்னை அணி மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Ruturaj

ஒருகட்டத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யும்போது 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியதால் நிச்சயம் சென்னை அணியின் நிலைமை அதோகதிதான் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் விதமாக மீண்டும் சிறப்பாக விளையாடி வெற்றி வரை சென்றது ரசிகர்களுக்கு உண்மையில் இரு விருந்தாகவே அமைந்தது எனலாம்.

Advertisement