ஹேசல்வுட்டிற்கு பதிலாக சி.எஸ்.கே தேர்வுசெய்துள்ள மாற்றுவீரர் இவர்தான் – விவரம் இதோ

hazelwood

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து ஹேசல்வுட் பயோ பப்பில் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தன்னை வெளியேற்றி கொண்டார். இது குறித்து விளக்கமளித்த ஹேசல்வுட் கடந்த சில மாதங்களாகவே நான் பயோ பப்பிலில் இருந்த வருகிறேன் மேலும் இரண்டு மாதங்களுக்கு என்னால் இருக்க இயலாது என்று கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர் இருப்பதாலும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் ஸ்ரீலங்கா தொடர் இருப்பதாலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை டி20 தொடர் இருப்பதாலும், அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இருப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

hazelwood 1

இன்னும் 10 முதல் 12 மாதங்களுக்கு நான் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட உள்ளேன். அதனால் எனது உடல் மற்றும் எண்ணம் நல்ல வகையில் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எனக்கு இப்போது சிறிது ஓய்வு தேவை அதனால் நான் ஆஸ்திரேலியாவில் எனது குடும்பத்துடன் நேரத்தை கழிக்க விரும்புகிறேன் என்று கூறி அதனால் இந்த அமைப்பில் தொடரை விளையாட விரும்ப வில்லை என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக வெறும் ஏழு டி20 போட்டியில் விளையாடி 7 விக்கெட்டுகளும், அதேபோல ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் விளையாடி வெறும் 5 விக்கெட்டுகளை மட்டும் தான் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் எடுத்துள்ளார். இருப்பினும் இந்த ஆண்டு நடந்து முடிந்துள்ள பிக் பேஷ் தொடரில் சிறப்பாக விளையாடி 16 விக்கெட்டுகளை ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் கைப்பற்றி இருக்கிறார். மேலும் அந்த தொடரில் இவரது அக்கணமே 7.03 ஆகும்.

Jason-Behrendorff

எனவே சென்னை நிர்வாகம் இவரை ஹேசல்வுட்டுக்கு மாற்று வீரராக தேர்ந்தெடுத்துள்ளது. மும்பையில் ஐந்து போட்டிகளில் விளையாட இருக்கும் சென்னை அணியில் இவர் விளையாடினால், கண்டிப்பாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மோசமான பந்துவீச்சின் காரணமாக தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது.