சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகெங்கும் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் பாதிப்பு ஓரளவு துவங்கியுள்ளது. அதுமட்டுமின்றி மேலும் மேலும் இந்த வைரஸ் தொற்று பரவக் கூடாது என்பதற்காக இந்திய அரசாங்கம் ஏகப்பட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக நரேந்திர மோடி (மார்ச் 22ம் தேதி) அதாவது இன்று முழுவதும் மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் வீட்டுக்குள் தங்களைத் தனிமைப்படுத்தி இன்று ஒரு நாள் முழுவதும் வெளியில் வராமல் இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பாரவாமல் இருக்க ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதனை தொடர்ந்து தற்போது இன்றைய நாள் முழுவதும் மக்கள் அனைவரும் பெரும்பாலும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து இந்த வைரசுக்கு எதிரான தங்களது போராட்டத்தையும் அரசாங்கத்திற்காக ஒத்துழைப்பும் கொடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த முயற்சியினை இன்று முழுவதும் வெற்றிகாகரமாக செய்த பிறகு இந்த தொற்றுக்கு எதிராக ஓய்வின்றி வேலை செய்துவரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைகளை தட்டுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனை அடுத்து தற்போது மாலை வரை பொதுமக்கள் நடமாட்டம் இந்தியா முழுவதும் அதிகம் காணப்படவில்லை. அனைவரும் வீட்டிற்குள் பத்திரமாக இருக்கிறார்கள் மேலும் இந்த நிலைமை குறித்து சிஎஸ்கே அணியின் நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளது. அதன்படி :
Stay in your Den this weekend. Take care of yourself & the old folks. Let’s make life hard for the virus. And let’s whistle to express our gratitude to the relentless fighters of the virus. PS. Try doing without using the hands. Tomo 5 PM. #WhistlePoduAt5 #JantaCurfew #COVID2019 pic.twitter.com/MaOQgpiX9H
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2020
கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைப்பதற்காக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்குமாறும் மேலும் மாலை 5 மணிக்கு மோடி கூறியது போல கைதட்டுவது மட்டுமின்றி நமது ஸ்டைலில் விசிலடித்து (விரல்களை பயன்படுத்தாமல் விசில் அடித்து) அவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள் என்று பதிவினை விட்டுள்ளது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.