சென்னை அணிக்கு இவர் கேப்டனா வந்தா சரியா இருக்கும். அவர் ஜென்டில்மேன் – ரசிகர்கள் குறிப்பிடும் அந்த வீரர் யார் ?

Csk-vsMi

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 39 வயது ஆகிவிட்டது. பெரும்பாலும் அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் ஆடுவார் அதன்பின்னர் அவ்வளவுதான். தோனி சுற்றியே கடந்த 12 வருடமாக இயங்கிவந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற ஒரு மிகச்சிறந்த கேப்டனின் இடத்தை நிரப்புவதற்கு மிகப்பெரிய வீரர் தேவை.

Dhoni

அணியில் தற்போது வெளியில் இருக்கும் சுரேஷ் ரெய்னா அணியை வழிநடத்திய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் அவர் தோனியை போல் அணியை வழிநடத்துவார் என்பது கேள்விக்குறி தான். தற்போது அவர் சரியான மனநிலையிலும் இல்லை என்று கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த வருடம் புதிய கேப்டன் தான் நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டு வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சர்வதேச அணியின் கேப்டனாக இருக்கும் அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக இருக்கிறார்கள். தற்போது ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் இருக்கிறார். அந்த அணியில் கேப்டன் தகுதிக்கு திறமையான கேன் வில்லியம்சன் அந்த அணியில் இருக்கிறார்.

Williamson

ஆனால் அவருக்கு அந்த அணி போதிய மரியாதை கொடுப்பதில்லை. அவரது பங்கேற்கும் போட்டிகளில் அவரது பேட்டிங்கிற்கு ஏற்ற இடமும் அந்த அணியில் இல்லை. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தால் நன்றாக இருக்கும். மேலும் சமீபத்தில் பயிற்சியாளர் பிளமிங் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இரு சிறந்த நியூசிலாந்து கேப்டன்கள் என்று ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது.

- Advertisement -

Williamson

இதனால் கேன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியை விட்டு வெளியே வந்து விட்டால் கண்டிப்பாக அந்த நேரத்தில் சென்னை அணி அவரை எடுத்து தனது அணியின் கேப்டனாக மாற்ற முயற்சிக்கும் என்று தெரிகிறது. இது மட்டும் நடந்துவிட்டால் மீண்டும் தோனி போன்ற ஒரு கேப்டன் சென்னை அணிக்கு கிடைத்த விடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.