அவருக்கு பதிலா உத்தப்பாவுக்கு வாய்ப்பு கொடுங்கள். தோனியிடம் வேண்டுகோள் வைத்த ரசிகர்கள் – அழுத்தத்தில் தோனி

Dhoni

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் நேற்றைய போட்டியில் மோதிக் கொண்டனர். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணி நிர்ணயித்த இலக்கை வெறும் 15.4 ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்றைய வெற்றி ஒரு வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நம்பிக்கை அளித்தாலும், தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் ஆட்டம் முழுவதும் சொதப்பிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

chahar 1

நேற்றைய போட்டியில் கிறிஸ் கெயில் தொடக்கத்திலேயே ருத்ராஜிக்கு கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை வழங்கினார். ஆனால் அந்தக் கேட்சை ருத்ராஜ் தவறவிட்டார். ஒருவேளை அந்தக் காட்சியை மட்டும் ருத்ராஜ் மிக கச்சிதமாக பிடித்திருந்தால் பஞ்சாப் அணியை 100 ரன்களுக்குள் சென்னை அணியால் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

கேட்சை தவற விட்டதால் அவர் அடிக்கடி பீல்டிங் பொஷனில் இடம் மாற்றப்பட்டு கொண்டே இருந்தார். மேலும் மிக பதட்டத்துடன் காணப்பட்டார். இந்தப் பதட்டம் அவரது பேட்டிங்கிலும் பிரதிபலித்தது. மிகவும் எளிய இலக்கை எதிர்கொண்டு விளையாடிய ருத்ராஜ் மிகவும் மோசமாகவே விளையாடினார்.

Ruturaj

16 பந்தங்களை மேற்கொண்டு வெறும் 5 ரன்களை அடித்து மிகப்பெரிய அளவில் சொதப்பினார். எனவே இனிவரும் போட்டிகளில் அவருக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் அவருடைய இடத்தில் ஆட வைக்கும் அளவுக்கு மற்றவர்களும் சென்னை அணியிடம் தற்போது கைவசம் இல்லை. இருப்பினும் துவக்க வீரருக்கான இடத்திற்காக உத்தப்பா காத்திருக்கிறார். எனவே தோனி இந்த குறையை வெகு விரைவில் சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி அடுத்த போட்டியில் உத்தப்பா விளையாட வேண்டும் எனவும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

- Advertisement -

uthappa 1

முதல் போட்டியில் சொதப்பிய தீபக் சாஹருக்கு தோனி ஆலோசனை வழங்கினார். அதன் பின்னர் இரண்டாவது போட்டியில் மிக அபாரமாக விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி தீபக் அசத்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அதேபோல ருத்ராஜுக்கும் தோனி தக்க ஆலோசனை வழங்கி அவரை நன்றாக ஆட வைப்பார் என்று சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி இல்லையெனில் உத்தப்பாவுக்கு வாய்ப்பளிக்கும்படியும் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.