சென்னை ரசிகர்கள் ஒத்துக்கமாட்டாங்க. தோனி ஐ.பி.எல் ரிட்டயர்மென்ட் அங்கதான் நடக்கணும் – சி.எஸ்.கே நிர்வாகி

Dhoni
- Advertisement -

இந்த ஆண்டு நடக்கவுள்ள 14வது ஐபிஎல் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 9 தொடங்கி மே 30 வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளன. சென்னை , மும்பை , கொல்கத்தா , பெங்களூரு , டெல்லி மற்றும் அகமதாபாத் போன்ற ஊர்களில் ஐபிஎல் போட்டி தொடர் நடக்க உள்ளது. சென்னை , மும்பை , கொல்கத்தா , பெங்களூரு ஆகிய மைதானங்களில் தலா பத்து போட்டிகளும் , டெல்லியில் எட்டு போட்டிகளும் மற்றும் அகமதாபாத்தில் ப்ளே ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ipl trophy

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐயின் இந்த செயல் திருப்திகரமாக இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு அணியையும் ஹோம் கிரவுண்ட்களில் விளையாட அனுமதிக்காமல் வேறு மைதானத்தை ஹோம் கிரவுண்டாக ஏற்றுக் கொண்டு விளையாட வைப்பது பிசிசிஐயின் மோசமான முடிவாகும். மும்பை அணி சேப்பாக் மைதானத்திலும் சென்னை அணியை வான்கடே மைதானத்தில் ஆடுவது சற்று வேடிக்கையாக உள்ளது என்று கூறினார்.

குறிப்பாக டெல்லி அணியில் ஆடிவரும் ரகானே, ஐயர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் மும்பையைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுக்கு வான்கடே மைதானத்தில் அதிக போட்டி விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல மற்றொரு பக்கம் பஞ்சாப் அணியில் ஆடி வரும் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் பெங்களூரைச் சேர்ந்த வீரர்கள். அவருக்கு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் விளையாட அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்போது இந்தக் கணக்கின்படி பார்த்தால் இது அவர்களுக்கு ஹோம் கிரவுண்டு இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் மேலும் பிசிசிஐ அந்தந்த அணிகளை அவர்களது ஹோம் கிரவுண்ட்களில் அட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி வருட ஐபிஎல் தொடர் ஆக கூட இருக்கலாம். அதன்படி பார்த்தால் அவருக்கு வான்கடே மைதானத்தில் வைத்து அவரை வழியனுப்பி ஃபேர்வெல் நடத்த முடியாது.

cskvskxip

சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து தான் அதை அவருக்கு நாங்கள் செய்ய முடியும். ஏனெனில் சென்னை ரசிகர்கள் தோனியின் வழியனுப்பும் போட்டி வேறு எங்கு நடந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சொந்த மைதானத்தில் ரசிகர்களின் பெரிய கூட்டத்திற்கு மத்தியிலேயே தான் தோனி ஓய்வு பெறவேண்டும். எனவே அந்தந்த அணிகளை அவர்களது சொந்த மைதானங்களில் ஆட அனுமதிக்க வேண்டும் அப்படி அனுமதிப்பதே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறி முடித்தார்.

Advertisement