பேட்டிங் மற்றும் பவுலிங் என ரெண்டுலும் அசத்துறாரு. நிச்சயம் இவர் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே டீம்ல இருக்கனும் – ரசிகர்கள் கோரிக்கை

CSK-1

ஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

Dhoni

அதன்படி முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இளம் வீரர் தீபக் ஹூடா 30 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் என 62 ரன்களையும், கேஎல் ராகுல் 29 ரன்களும் குவித்தனர். சென்னை அணி சார்பாக லுங்கி நெகிடி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 154 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் கெய்க்வாட் 49 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என 62 ரன்களையும், டு பிளிசிஸ் 34 பந்துகளில் 48 ரன்களையும், அம்பத்தி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ருத்ராஜ் கெய்க்வாட் தேர்வானார்.

Ruturaj

இந்தத் தொடரில் சென்னை அணி ஏழாம் இடத்தை பிடித்து வெளியேறினாலும் அடுத்த தொடரில் சி.அணியில் மாற்றங்கள் பல இருக்கும் என தோனி அறிவித்திருந்தார். மேலும் ஆக்சன் எவ்வாறு நடத்துகிறது அதன்படியே அணியும் அமையும் என்று அவர் கூறி உள்ளதால் சென்னை அணி தக்கவைக்க இருக்கும் வீரர்கள் குறித்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

மேலும் சாம் கரனை அணியில் வைத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஏனெனில் அவர் மிகவும் இளம் வயது வீரர் என்பதால் அடுத்த 8 முதல் 10 ஆண்டுகள் வரை அவரால் சென்னை அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வழங்க முடியும் என்பதாலும் அவரை மாற்றாமல் அணிகள் வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

curran

அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளரான அவர் பந்துவீசுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சென்னை அணிக்காக துவக்க வீரராக களம் இறங்கி தனது அதிரடியை நிரூபித்துள்ளார். எனவே அவர் நிச்சயம் அடுத்த ஆண்டு நீடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.