16 போட்டியில் 1 முறை தான் 30 ரன்கள் அடிச்சிருக்காரு. இவர் தேவையா – சி.எஸ்.கே வீரரை வறுத்தெடுத்த ரசிகர்கள்

CSK-Fans
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த தோல்வியை அடுத்து சி எஸ் கே அணி பெரும் சிக்கலை சந்தித்ததுள்ளது எனக் கூறலாம். மேலும் அணி தேர்வில் உள்ள குறைபாடுகளே இந்த தொடர் தோல்விகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Dhoni-1

- Advertisement -

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் மூன்று முக்கிய மாற்றங்களை தோனி செய்திருந்தார் அதன்படி சரியாக விளையாடாத முரளி விஜய்க்கு பதிலாக ராயிடுவும் அதே போன்று கெய்க்வாடிற்கு பதிலாக ஷர்துள் தாகூர் மற்றும் ஹேரசல்வுட்டிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் பிராவோவையும் அணியில் இணைத்து இருந்தார்.

ஆனால் ஏன் கேதர் ஜாதவ் அணியிலிருந்து நீக்கவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனெனில் கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் சென்னை அணியில் ஜாதவ் பவுலிங் செய்யவில்லை. அதேபோன்று மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை.

jadhav

நேற்றைய போட்டியிலும் 165 ரன்களை துரத்திய சென்னை அணியில் 4-வது வீரராக களமிறங்கிய ஜாதவ் 10 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரின் தொடர்ச்சியான இந்த மோசமான செயல்பாடு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருக்கு இனியும் சிஎஸ்கே அணிக்கு செட்டாக மாட்டார் என்றும் அவரை நீக்குமாறும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kedar-Jadhav (1)

மேலும் கேதார் ஜாதவ் கடைசியாக விளையாடிய 16 போட்டியில் ஒரே முறைதான் 30 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதுவும் 2018 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 58 பந்துகளில் 57 ரன்கள் குவித்துள்ளார். அதைத்தவிர சொல்லிக் கொள்ளும்படி அவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டம் இல்லை. மேலும் பவுலிங்கும் செய்யாததால் அவர் சிஎஸ்கே அணிக்கு செட்டாக மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்றும் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் காட்டமாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement