என்னைக்காவது ஒருநாள்னா பரவாயில்ல. எப்பவுமே இப்படித்தானா ? – சி.எஸ்.கே அணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Jadhav-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி தற்போது அபிதபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்ததால் சென்னை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

Jadeja

- Advertisement -

இந்நிலையில் தற்போது முதல் இன்னிங்சை முடித்துள்ள சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்து உள்ளது. இதனால் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

எப்போதாவது ஒரு போட்டியில் சரியாக விளையாடவில்லை பொறுமையாக விளையாடுகிறீர்கள் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் எப்போதுமே டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடினால் எப்படி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் வேகமாக ஆட வேண்டிய ராயுடு, தோனி, ஜடேஜா ஆகியோர் மிகவும் பொறுமையாக விளையாடினர்.

Jadhav 1

அதுமட்டுமின்றி சொதப்பல் மன்னன் கேதார் ஜாதவ் கடைசியில் இறங்கி 7 பந்துகளில் வெறும் 4 ரன்களை மட்டுமே அடித்து உள்ளார். அவரின் ஆட்டமும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் மீண்டும் சென்னை அணி கடைசி இடத்திற்கு செல்லும் என்பது உறுதி.

Advertisement