பார்ம் அவுட்டான ஒரு வீரருக்கு சப்போர்ட் பண்ணி 2 இளம்வீரர்களை புறக்கணித்த தோனி – கொந்தளித்த ரசிகர்கள்

Dhoni
- Advertisement -

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் ஒரு மோசமான தொடராகவே அமைந்துள்ளது. முதலில் ரெய்னா, ஹர்பஜன் விலகல் அடுத்து அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா என மோசமாக துவங்கிய தொடர் தற்போது 10 போட்டிகளில் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வி என படு மோசமாக சென்றுகொண்டிருக்கிறது. கிட்டதட்ட இந்த ஆண்டு பிளே ஆஃப் வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது என்றே கூறலாம்.

CSK-1

- Advertisement -

சி.எஸ்.கே அணியில் அதிகப்படியான வயது முதிர்ந்த வீரர்களை வைத்திருப்பதால் திறம்பட செயல்பட முடியவில்லை என்ற விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் தோல்விக்குப் பிறகு தோனி கூறுகையில் : இளம் வீரர்களிடம் வெற்றிக்கான ஒரு உத்வேகம் காணப்படவில்லை. அதனாலேயே அவர்களுக்கு தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேசியிருந்தார். இந்நிலையில் தோனியின் இந்த பேட்டிக்கு ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒருவகையில் ரசிகர்கள் கோபப்படவும் காரணம் இருக்கின்றது. ஏனெனில் பார்ம் அவுட்டில் இருக்கும் கேதர் ஜாதவ்க்கு தோனி ஆதரவாக இருந்து ஜெகதீசன் மற்றும் ருதுராஜ் கைக்வாடு ஆகியோருக்கு வாய்ப்பு தராமல் இருந்து வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த தொடரின் 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜாதவ் 5 இன்னிங்சில் பேட்டிங் செய்து வெறும் 62 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இந்த 8 போட்டியிலும் அவர் பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Jadhav 1

இடையில் இரண்டு போட்டிகளில் நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக ஒரு வாய்ப்பினைப் பெற்ற ஜெகதீசன் சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான நேரத்தில் 33 ரன்களை அடித்தார். ஆனால் அடுத்த போட்டியில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதேபோல தொடரின் ஆரம்பத்தில் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைத்த ருதுராஜ் அதிர்ஷ்டமின்றி 5 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். ஆனால் அவரை விட ஜாதவ் மோசமாக விளையாடி வருகிறார் என்று கூறவேண்டும்.

- Advertisement -

இருப்பினும் அவருக்கு ஆதரவாக நின்ற தோனி இவர்கள் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இளம் வீரர்கள் இடையே வெற்றிக்கான உத்வேகம் இல்லை என்று தோனி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நன்றாக விளையாடாத வீரரை குறிப்பிடாமல் இளம் வீரர்கள் மீது இப்படி ஒரு கருத்தை முன்வைத்தது பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

Jagadeesan

தோனியின் இந்த கருத்தினால் நிச்சயம் அவர்கள் இருவரும் மனம் உடைந்து இருப்பார்கள் என்று ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். இனி வரும் போட்டிகளில் ஆவது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா ? இல்லை மீண்டும் தோல்விக்கு பிறகு இதையே தோனி குறை கூற இருக்கிறாரா என்பது போன்றும் தங்களது கருத்துக்களை எதிர்மறை விமர்சனங்களாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement