இத்தனை டாட் பால்களையா ஆடுவீங்க ? சி.எஸ்.கே பேட்ஸ்மேன்கள் மீது – கடுப்பான ரசிகர்கள்

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 29 ஆவது லீக் போட்டி இன்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

srhvscsk

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை அடித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சன் ரைசர்ஸ் அணி 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் வாட்சன் 38 பந்துகளில் 42 ரன்களும், ராயுடு 34 பந்துகளில் 41 ரன்களும் குவித்து சிறப்பான பங்களிப்பை அமைத்தாலும் இது டி20 வடிவத்திற்கு போதுமான அதிரடி கிடையாது. மேலும் இறுதியில் வந்த தோனி, ஜடேஜா ஆகியோர் சிறிது அதிரடியாக விளையாடி இருந்தாலும் மிடில் ஓவர்களில் ரன்ரேட் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்.

dhoni 1

குறிப்பாக இந்த போட்டியில் மொத்தமாக கிட்டத்தட்ட 40 டாட் பால்களை விளையாடி இருக்கிறார்கள். இந்த பந்துகளில் சிங்கிள் எடுத்திருந்தால் அணியின் ஸ்கோர் 180, 190 ரன்களை கடந்திருக்கும் என்பதால் டாட் பால் அதிகமாக விளையாடக் கூடாது என்றும் சிஎஸ்கே அணி மீது தங்களது கருத்துக்களை வைத்து வருகின்றனர். சி.எஸ்.கே அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் வயது மூத்த வீரர்கள் என்பதால் ரன்களை ஓடி எடுக்க மறுப்பதையும் நாம் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement