அந்த ஒரு ரூல்ஸ் இருக்கும் வரை தோனி பேட்டிங்கை பாக்கவே முடியாது.. இனிமேலும் கஷ்டம் தான் – ரசிகர்கள் ஏமாற்றம்

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 42 வயதை எட்டியுள்ளதால் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது அவரது கடைசி சீசனாக அமைய வாய்ப்புள்ளது. அந்த வகையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி ருதுராஜ் கெய்க்வாட்டை புதிய கேப்டனாக அறிவித்தார். அவரது தலைமையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே பலரது ஆசையாகவும் உள்ளது.

அதன்படி நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் தோனி கீப்பிங் செய்திருந்தாலும் இரண்டாவதாக பேட்டிங் செய்ய வராது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

இந்த ஆண்டுடன் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெறுவார் என்பதனால் தோனி பேட்டிங் செய்வதை எப்படியாவது ஒரு முறை மைதானத்தில் நேரில் கண்டிட வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வரும் வேளையில் நேற்றைய போட்டியில் தோனி களமிறங்காதது குறித்து ரசிகர்கள் பலரும் ஏமாற்றத்தை தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய சென்னை அணி வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியதால் எளிதாக இந்த ஸ்கோரை சேசிங் செய்து விட்டது. அதனால் இளம் வீரரான சமீர் ரிஸ்விக்கு கூட அறிமுக போட்டியில் பேட்டிங் செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதிமுறை இருக்கும் வரை தோனி களமிறங்க வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது. இந்த விதிமுறையினால் தோனியின் ரசிகர்கள் மேலும் ஏமாற்றத்தை சந்திக்க காத்திருக்கின்றனர். ஏனெனில் தற்போதைய சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜாவோடு சேர்த்து இம்பேக்ட் விதிமுறை மூலம் 7 வீரர்கள் பேட்டிங் செய்ய முடியும். அதன் பின்னர் எட்டாவது வீரராகவே தோனி பேட்டிங் வரிசையில் இருக்கிறார்.

இதையும் படிங்க : ஜெயிச்சது எல்லாம் ஓகே தான்.. ஆனா இந்த 2-3 விஷயத்துல ஒர்க் பண்ணனும் – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி பேட்டி

எனவே 6 வீரர்கள் ஆட்டம் இழந்த பின்னால் தான் தோனி களமிறங்குவார் என்று தெரிகிறது. அதனால் பெரும்பாலான போட்டிகளில் தோனி விளையாட வாய்ப்பு இல்லை. ரசிகர்களுக்காக தோனி எட்டாவது இடத்தில் இருந்து தன்னை முன்னேற்றி ஐந்தாவது இடத்திலோ ஆறாவது இடத்திலோ பேட்டிங் செய்தால் மட்டுமே அவரது பேட்டிங்கை பார்க்க முடியும். ஆனால் தோனி தனது பினிஷர் ரோலில் இருந்து பின்வாங்காமல் இருப்பதால் இந்த சீசனிலும் பெரும்பாலான போட்டிகளில் தோனியின் பேட்டிங்கை பார்க்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement