Sachin : சச்சின் பிறந்தநாளை முன்னிட்டு சி.எஸ்.கே ஆர்மியின் வாழ்த்துக்கள் – விவரம் இதோ

சச்சினின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி முடிந்ததும் சென்னை அணியின் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கருக்கு

Dhoni-Fan
- Advertisement -

சச்சினின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி முடிந்ததும் சென்னை அணியின் ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சச்சின்,சச்சின் என்று சேப்பாக்கம் மைதானத்தில் முழக்கமிட்டனர். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஆடிய சென்னை அணி துவக்க வீரரான வாட்சன் அதிரடி மூலம் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். ரெய்னா 38 ரன்களை அடித்தார். வாட்சன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement