தங்கத்தை போயி தகரம்னு நெனச்சிட்டோமே. மொயின் அலியிடம் மன்னிப்பு கேட்கும் ரசிகர்கள் – விவரம் இதோ

moeen-ali-1
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இதில் சென்னை அணி சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது 2-வது வெற்றியை பெற்று அசத்தியது. இதன்மூலம் புள்ளிபட்டியலிலும் சென்னை அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

csk vs rr

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்க வீரரை விரைவில் இழந்தாலும் மூன்றாவது வீரராக மொயின் அலி களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அவர் அணியின் ரன் ரேட்டை அதிகரிக்கும் வகையில் வேகமாக விளையாடி 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டி மட்டுமல்லாமல் இதற்கு முந்தைய போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அவர் டெல்லி அணிக்கு எதிராக 24 பந்துகளில் 36 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 31 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். அதுமட்டுமின்றி நேற்றைய போட்டியில் பந்துவீசிய அவர் மூன்று ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் அணி தோல்விப் பாதைக்கு செல்ல மிக முக்கியமான வழியை ஏற்படுத்தினார்.

moeen ali 2

இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இவருக்கு ஆட்டநாயகன் விருதும் நேற்று கிடைத்தது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தின் போது மொயின் அலியை சி.எஸ்.கே அணி 7 கோடிக்கு ஏலம் எடுத்திருந்த போது ஏற்கனவே சென்னை அணியில் ஏகப்பட்ட வயது முதிர்ந்த வீரர்கள் இருப்பதால் மொயின் அலி தேவையா ? என்று ரசிகர்கள் ஏகத்திற்கும் விமர்சனங்களை முன் வைத்து இருந்தார்கள்.

ஆனால் தற்போது இந்த சீசனில் மொயின் அலியின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை பார்த்து வரும் ரசிகர்கள் தாங்கள் விமர்சித்தது எல்லாம் தவறு என்றும், நீங்கள் ஒரு மேட்ச் வின்னர் என்று மொயின் அலியிடம் சமூக வலைதளம் மூலமாக மன்னிப்பு கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement