தினேஷ் கார்த்திக் மோர்கனிடம் கொடுத்தது போல். தோனி கேப்டன் பதவியை இவரிடம் கொடுக்க வேண்டும் – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்தே சென்னை அணிக்கு மிக மோசமான தொடராக அமைந்து வருகிறது. வழக்கமாக அனைத்து தொடரிலும் புள்ளிப் பட்டியலின் முதல் இரு இடங்களை ஆக்கிரமித்திருக்கும் சிஎஸ்கே அணி இம்முறை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடர் தோல்விகளால் சி.எஸ்.கே அணி எப்பொழுதும் இல்லாத வகையில் விமர்சனத்திற்க்கு உள்ளாகியுள்ளது.

Dhoni

- Advertisement -

இதனால் தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய புதிய வீரருக்கு கேப்டன் பதவியை அளிக்க வேண்டும் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக் அணியின் முன்னேற்றத்திற்காக உலக கோப்பையை வென்ற கேப்டன் மோர்கனிடம் தனது கேப்டன்சியை விட்டுக் கொடுத்தார்.

மேலும் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காகவும், அணியின் முன்னேற்றத்திற்காகவும் இதனை ஏற்றுக் கொள்வதாகவும் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது தோனி பேட்டிங்கில் சரியாக சோபிக்காத காரணத்தினால் அவரது பேட்டிங் திறனை அதிகரிக்கவும் மேலும் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் கேப்டன்சி துறக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Faf 1

அந்த வகையில் சிஎஸ்கே அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் மூத்த வீரர்கள் என்பதாலும் கேப்டன்சி இதுவரை செய்யாதவர்கள் என்ற காரணத்தினாலும் பலருக்கு இந்த பொறுப்பு செட் ஆகாது என்றும் ஏற்கனவே தென்னாபிரிக்க சர்வதேச அணியை பல ஆண்டுகள் வழிநடத்திய டூபிளெஸ்ஸிஸ் இடம் கொடுத்தால் வரும் 2-3 ஆண்டுகள் அவர் அணியை கட்டமைக்க உதவும் என்பதால் தோனி தனது கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Faf

தென்னாப்பிரிக்கா சர்வதேச அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பான ஆட்டத்தை வழங்கிய டூபிளெஸ்ஸிஸ் சிஎஸ்கே அணிக்காகவும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் தோனி தனது கேப்டன்சியை டூபிளெஸ்ஸிடம் ஒப்படைத்தால் சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு நல்ல நிலைமையில் இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement