சி.எஸ்.கே அணி மீதும் தோனி மீதும் கொண்ட அன்பினால் வீட்டையே மஞ்சள் நிறமாக மாற்றிய ரசிகர் – வைரலாகும் புகைப்படம்

CSK-Fans

ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்தே ஆரம்பத்தில் இருந்தே சென்னை அணிக்கு என்ன ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு என்றால் அது மிகையல்ல. இந்திய அளவில் இன்றி உலக அளவிலும் சிஎஸ்கே அணிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் தோனி மற்றும் அவரது தலைமையிலான அணியும் தான். ரசிகர்களின் ஆசையை எந்த விதத்திலும் ஏமாற்றம் அளிக்காமல் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

CSK-1

அதுமட்டுமின்றி அனைத்து ஐபிஎல் தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு சென்று சிஎஸ்கே அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் சிஎஸ்கே ஆரம்பத்திலிருந்து தோனி மட்டுமே சென்னை அணியை தலைமை தாங்கி நடத்தி வருவதால் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் உண்டு என்றால் அது மிகை அல்ல. அந்த அளவுக்கு தோனி மீது சென்னை ரசிகர்கள் அன்பும் அக்கறையும் வைத்து அவரை நம் வீட்டுப் பிள்ளையாக பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் மிகப்பெரிய தோனி ரசிகர். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணிக்கும் மிகப் பெரிய ரசிகராக இருந்து வருகிறார். துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய விசிறி அவர் அதுமட்டுமின்றி தோனியின் மீது கொண்ட அன்பினால் அவர் விளையாடும் போட்டிகளை சென்று நேரில் பார்ப்பது மட்டுமின்றி அவரது ரசிகராகவே தொடர்ந்து இருந்து வருகிறார்.

home-1

இந்நிலையில் தற்போது விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு துபாயில் இருந்து வந்துள்ள அவர் தோனியின் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேலாக செலவு செய்து வீடு முழுவதும் மஞ்சள் நிறமாக மாற்றியுள்ளார்.

- Advertisement -

home

மேலும் தோனி படத்தையும் ஒரு பக்க சுவரில் வரைந்துள்ள அவர் அந்த வீட்டின் முகப்பில் “ஹோம் ஆப் தோனி ஃபேன்” என எழுதியுள்ளார். இதனைக் கண்ட ஊர் மக்கள் அந்த வீட்டினை ரசித்து வருகின்றனர். மேலும் அது மட்டுமின்றி இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.