முடிந்தது கதை ! 2020ஐ விட மோசமான தோல்வி – முதல் அணியாக வெளியேரும் நிலையில் சிஎஸ்கே

CSK vs SRH 3
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 9-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு துவங்கிய 18-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த 2 அணிகளுமே இதுவரை ஒரு வெற்றிகளைக் கூட பதிவு செய்யாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் தள்ளாடிக் கொண்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கின. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 15 (11) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார்.

Ruturaj Gaikwadஅந்த நிலையில் கடந்த போட்டிகளில் 0,1,1 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வந்த ருதுராஜ் இம்முறை சற்று முன்னேற்றமடைந்து 16 (13) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றமளித்தார். இதனால் 36/2 என ஆரம்பத்திலேயே சரிந்த சென்னையை அடுத்து ஜோடி சேர்ந்த மொயின் அலி – ராயுடு ஆகியோர் மீட்டுடுக்க போராடினார்கள்.

- Advertisement -

சென்னை தடுமாறி 154 ரன்கள்:
மிடில் ஓவர்களில் பொறுப்பை காட்டிய இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்து ஓரளவு சென்னையை காப்பாற்றிய போது 27 (27) ரன்கள் எடுத்து அம்பத்தி ராயுடு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே அவருடன் சற்று அதிரடியாக விளையாடிய மொயின் அலி 35 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த இளம் வீரர் சிவம் துபே 3 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Moeen Ali

இதனால் 110/5 என மீண்டும் சரிந்த சென்னையை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த தோனியும் 3 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அவருடன் களமிறங்கிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 23 ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் தட்டுத்தடுமாறி சென்னை 154/7 என்ற சுமாரான ஸ்கோரை எட்டியது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

ஹைதெராபாத் முதல் வெற்றி:
அதை தொடர்ந்து 155 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் இணைந்து ஆரம்பம் முதலே சென்னை பவுலர்களை பந்தாடினர். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்து சென்னையின் தோல்வியை ஆரம்பத்திலேயே உறுதிசெய்த இந்த ஜோடியில் 32 (40) ரன்கள் எடுத்து வில்லியம்சன் அவுட்டாக அவருடன் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த இளம் வீரர் அபிஷேக் சர்மா 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 75 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தபின் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

Kane Williamson CSK vs SRH

ஒருபுறம் சென்னை பவுலர்கள் தொடர்ந்து மோசமாக பந்து வீசிக்கொண்டிருக்க அதை பயன்படுத்திய மற்றொரு வீரர் ராகுல் திரிபாதி வெறும் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் அதிரடியாக 35* ரன்கள் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தார். இப்படி டாப் ஆர்டர் வீரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 17.4 ஓவர்களிலேயே 155/2 ரன்களை எடுத்த ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றது. சென்னையின் பந்துவீச்சு திணறிய வேளையில் டுவைன் பிராவோ மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் மட்டும் தலா 1 விக்கெட்டை சாய்த்தனர்.

கதை முடிந்ததா:
இந்த வெற்றியால் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து 10-வது இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் அதிலிருந்து மீண்டெழுந்து தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்து சென்னைக்கு டாட்டா வைத்துவிட்டு 8-வது இடத்தைப் பிடித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. மறுபுறம் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்தோடு விளையாடும் சென்னை ஏற்கனவே தனது முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்து இருந்தது.

- Advertisement -

CSK vs SRH

 

அப்படிப்பட்ட நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்ததால் 4-வது தோல்வியை பதிவு செய்த சென்னை 8-வது இடத்திலிருந்து 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் சென்னை இப்படி அடுத்தடுத்து தோல்வி அடைந்து வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிபட்டியலில் அடிபாகத்தில் திண்டாடுவது அந்த அணி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

பொதுவாகவே சென்னை என்றால் ஒவ்வொரு வருடமும் குறைந்தது பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்ற பெயர் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் முறையாக பறிபோனதை சென்னை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். அந்த மோசமான அவமானத்தை சந்தித்த வருடத்தில் கூட இப்படி தொடர்ச்சியாக முதல் 4 போட்டிகளிலும் சென்னை தோற்றதே கிடையாது. அந்த வகையில் 2020ஐ விட இந்த வருடம் மோசமாக செயல்பட்டு வரும் சென்னை அடுத்து நடைபெறும் தனது 10 லீக் போட்டிகளில் அனைத்தையும் வெல்ல வேண்டிய கட்டாயதில் உள்ளது. ஏனெனில் இம்முறை 10 அணிகள் விளையாடுவதால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல குறைந்தது 9 வெற்றிகள் தேவைப்படுகிறது. எனவே இனி வரும் போட்டிகளில் 2 தோல்வியை சந்தித்தால் கூட மீண்டும் 2020 போலவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்று பரிதாபமாக வெளியேற வேண்டிய நிலைமை சென்னைக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement