சி.எஸ்.கே அணியில் இந்தாண்டு இது மட்டும் நடக்கவே நடக்காது – உறுதி செய்த தல தோனி

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே இன்று ஐபிஎல் தொடரில் 25 வது லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு அணிகளும் 25 போட்டியில் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 முறையும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

Kohli

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை அடித்தது. இதனால் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் நிகழ்வின்போது கேப்டன் தோனி சிஎஸ்கே அணியில் நடக்கவிருக்கும் ஒரு முக்கிய விடயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அது யாதெனில் இந்த வருட ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை டிரான்ஸ்பர் செய்துகொள்ளும் முறை நடைபெற உள்ளது. அந்த நடைமுறையில் இந்த தொடரில் ஒரு இரண்டு போட்டிகளுக்கு குறைவாக விளையாடியுள்ள வீரரை தொடரின் பாதியில் ஒரு அணி மற்ற அணிக்கு விட்டுக்கொடுக்கலாம். மேலும் எந்த ஒரு அணியும் வேறு ஒரு அணியில் இடம்பெற்றுள்ள வீரரை மாற்றிக்கொள்ளலாம்.

Dhoni-1

எனவே மிடில் ஆர்டர் வரிசையில் பலமிழந்து காணப்படும் சிஎஸ்கே அணி நிச்சயம் யாரையாவது மாற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக பார்த்திவ் பட்டேல், ரஹானே, விராட் சிங் போன்ற வீரர்களை அவர்கள் டிரான்ஸ்பர் மூலம் எடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இது குறித்து பேசிய தோனி : பொதுவாகவே ஒரு அணி புதிய வீரர்களை கொண்டு வர யாரும் விரும்பமாட்டார்கள்.

Dhoni-2

ஒரு அணி அதே அணியோடு தான் பெரும்பாலான போட்டிகளில் விளையாட விரும்பும். வெளியாட்கள் உள்ளே வருவதை பெரும்பாலும் அணி விரும்பாது. இதை யாரும் தவறாக நினைக்க கூடாது என்று தோனி கூறினார். இதனால் சிஎஸ்கே அணியில் யாரும் டிரான்ஸ்பர் மூலம் பாதி தொடரில் அணியில் இணைய மாட்டார்கள் என்று தோனி மறைமுகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement