தோனி தொடரின் நடுவில் ஜார்காண்ட் போய்விடுவாரா என பயந்த சிஎஸ்கே ரசிகர்கள். இப்போது ஹாப்பி நியூசோடு நிம்மதி பெருமூச்சு

dhoni
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு சரியாக செல்லவில்லை என்றாலும் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக சென்று வருகிறது. இதுவரை 22 போட்டிகள் முடிந்த நிலையில் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 8 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

csk vs rr

இருப்பினும் பெங்களூரு அணியை விட சிஎஸ்கே அணி ஒரு போட்டி குறைவாக விளையாடி உள்ளதால் மீண்டும் ஒரு வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் அளவிற்கு வலுவாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொடரில் எந்த அணியும் வைத்திருக்காத அளவிற்கு ரன் ரேட் +1.612 என்ற அளவிற்கு அதிகமாக வைத்திருக்கிறது.

- Advertisement -

அந்த அளவிற்கு தற்போது சிஎஸ்கே அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இந்த நிலையில் ஜார்கண்டில் இருக்கும் அவரது தாய் தந்தை சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகியது. தோனியின் தாய் தேவகி மற்றும் அவரது தந்தை பான் சிங் ஆகியோர் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அதனால் தோனி இந்த ஐபிஎல் தொடரை விட்டு இடையில் ஊர் திரும்பி விடுவாரோ ? என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் அதன் காரணமாக சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா ? மாட்டாரா ? என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் தற்போது தோனியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீண்டு தற்போது வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தோனி தற்போது நிம்மதியுடன் விளையாடி வருகிறார்.

sakshi

தோனியின் பெற்றோர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளதால் தற்போதைக்கு ஜார்கண்ட் செல்ல வேண்டிய நிலை இருக்காது என்றும் தொடர்ந்து சென்னை அணிக்காக தலைமை தாங்கி இந்த தொடரில் சென்னை அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு செல்வார் என்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement