நேத்து சி.எஸ்.கே பெற்ற வெற்றி ஒரு சாதாரண வெற்றி கிடையாது – உருவான புதிய வரலாறு

Jadeja-2

ஐபிஎல் தொடரில் 49 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

CSKvsKKR

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரானா 61 பந்துகளில் 87 ரன்களையும், சுப்மான் கில் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்தனர். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 21 ரன் குவிக்க கொல்கத்தா அணி 172 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் 53 பந்துகளில் 72 ரன்களையும், அம்பத்தி ராயுடு 38 ரன்களும் குவித்தனர். இறுதிநேரத்தில் ஜடேஜா 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரி என 31 ரன்களை அடித்து அசத்தினார். ருதுராஜ் ஆட்டநாயகனாக தேர்வானார்.

நேற்றைய போட்டியில் சி.எஸ்.கே அணி கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடித்து வெற்றியை பெற்றது. பிளேஆப் செல்லும் வாய்ப்பு உறுதியாகவில்லை என்றாலும் ஜடேஜா சிறப்பாக விளையாடி போட்டியை சிக்சருடன் முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

- Advertisement -

kkr

அதாவது இதுவரை ஐபிஎல் தொடரில் வெற்றிக்கான இலக்கை சேசிங் செய்யும்போது அதிகமுறை கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கை எட்டிய அணியாக சிஎஸ்கே முதல் இடத்திற்கு வந்துள்ளது. இதுவரை 6 முறை கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சி.எஸ்.கே அணி வெற்றி இலக்கை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.