Chennai Super Kings : தொடர் வெற்றியின் மூலம் சாதனையை படைக்க உள்ள சி.எஸ்.கே – என்ன சாதனை தெரியுமா ?

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்க உள்ளது.

csk-vs-mi

- Advertisement -

இதுவரை நடந்த 12 ஐ.பி.எல் தொடர்களில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறையும் ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதால் போட்டி மும்பை அணிக்கே சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில், இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் கடந்த 5 முறைகளில் 4 முறை மும்பை அணியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

raina

அதனால் வான்கடே மைதானத்தில் சென்னை அணிக்கெதிரான தொடர் வெற்றிகளை பெற்றுவரும் மும்பை அணியை இன்று நடக்கவுள்ள போட்டியில் வென்று அவர்களின் சாதனையை முறியடித்து வான்கடே மைதானத்தில் வெற்றியை பெற சென்னை அணி கடுமையாக போராடும் எனவே, இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement