- Advertisement -
ஐ.பி.எல்

குறைந்த ரன்கள் மட்டுமில்ல.. அன்புடென்னில் ஏற்பட்ட 5 ஆவது தோல்வி – அடுக்கடுக்கான அவமானங்களை சந்தித்த சி.எஸ்.கே

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற அஜின்க்யா ரஹானே தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அடுக்கடுக்கான மோசமான சாதனையை நிகழ்த்திய சி.எஸ்.கே :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சி.எஸ்.கே அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே குவித்து ஏமாற்றத்தை அளித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்களையும், விஜய் சங்கர் 29 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு 10.1 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 107 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணியானது ஐந்து தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சென்றுள்ளது. அதுமட்டும் இன்றி இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் ஏகப்பட்ட மோசமான சாதனைகளை அடுக்கடுக்காக சிஎஸ்கே நிகழ்த்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சேப்பாக்கம் மைதானம் என்றாலே சென்னை அணியின் கோட்டை என்று பலராலும் பேசப்பட்டு வரும் வேளையில் நேற்றைய போட்டியின் மூலம் 103 ரன்களை குவித்து சென்னை மைதானத்தில் குறைந்தபட்ச ஸ்கோரை சி.எஸ்.கே பதிவுசெய்து மோசமான சாதனையை நிகழ்த்தியது. அதோடு இந்த தொடரில் தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே இப்படி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க : கேப்டனான பிறகும் இப்படித்தானா.. தோனியின் முடிவால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் – விவரம் இதோ

அதிலும் குறிப்பாக சேப்பாக்கத்தில் கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டியிலும் தோற்றுள்ளது. இப்படி சேப்பாக்கம் மைதானத்தில் 3 தொடர் தோல்விகளை சென்னை அணி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -