இந்த நிலைமை சி.எஸ்.கே அணிக்கு வரும்னு 3 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும் – அதிரவைத்த கோச் பிளமிங்

Fleming
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மோசமான விளையாடிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மட்டும் பெற்ற 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த பத்து வருடத்தில் அடைந்ததில்லை. அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது சி.எஸ்.கே அணி.

CSK-1

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் பல்வேறு சிக்கல்களை சென்னை அணி புதிதாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் விளையாடும் போது தனது சொந்த மைதானத்தில் அதாவது சேப்பாக்கத்தில் 7 போட்டி நடைபெறும். இதன் காரணமாக மிக எளிதாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருவதால் சென்னை அணியின் தோல்விக்கு இதுவும் பெரிய பிரச்சனையை உண்டாக்கி விட்டது. மேலும் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மிகவும் வயதான வீரர்கள் துபாய் தட்பவெப்ப நிலைக்கு இவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியவில்லை.

jadeja 1

இந்நிலையில் இது குறித்து பேசிய பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது… எப்படியும் இந்த வருடம் இந்த வயதான அதிகரித்துக்கொண்டே கஷ்டப்படுவோம் என்று எதிர்பார்த்தேன். மேலும், இந்த விடயத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே நான் கணித்திருந்தேன். அதன்படி தற்போது 3 ஆண்டுகள் கழித்து இங்கு சி.எஸ்.கே அணி கஷ்டப்பட்டு வருகிறது.

துபாய் ஆடுகளங்கள் எங்களிடமிருந்து புதிய புதிய வித்தியாசமான விஷயங்களை எதிர்பார்க்கிறது இன்று தோல்விக்கான காரணம் வயது முதிர்ந்த வீரர்கள் அணியில் அதிகமாக இருப்பதுதான் என்று நேரடியாக கூறினார் ஸ்டீபன் பிளமிங்.

Advertisement