சி.எஸ்.கே அணியின் தோல்விக்கு இவரும் ஒரு முக்கிய காரணம் தான் – சி.எஸ்.கே பயிற்சியாளர் குற்றச்சாட்டு

Fleming
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 7 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு இதே போன்று ஒரு சம்பவம் நடைபெற்றது. அந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

CSK-1

- Advertisement -

தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடாமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாகத் தான் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது என்பதை ரசிகர்களால் கணிக்க முடிகிறது. தற்போது மீதமிருக்கும் 7 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற்றால்தான் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

இந்நிலையில் இந்த தோல்விகள் குறித்து பேசியுள்ள பயிற்ச்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது… சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சரியாக ஆடாவிட்டால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அவுட் ஆகி விடுகிறார்கள். அணியே காலியாகி விடுகிறது. இதற்கு தீர்வு காணவேண்டும் மிடில் ஆர்டர் வீரர்கள் சரியாக ஆடவேண்டும் தற்போது இதுதான் முக்கியம்.

எங்களது அணிக்கு நிறைய ஆப்ஷன் இருக்கிறது. துவக்கம் நன்றாக இருக்கிறது ஆனால் மிடில் ஆர்டர் பேட்டிங் மிக மோசம். இதன் காரணமாக கடைசியில் எங்களுக்கு அழுத்தம் அதிகமாகி விடுகிறது மேலும் தோல்விகளுக்காக இன்னும் சில காரணங்கள் இருக்கிறது.

dhoni 1

அணியின் தோல்விக்கு வீரர்களின் வயதும் ஒரு காரணம் அணியில் உள்ள பல வீரர்களுக்கு வயதாகிவிட்டது. இதுவும் ஒரு காரணம் இதனால் கடைசியில் இறங்கும் வீரர்கள் அதிரடியாக ஆடுவதில்லை என்று மறைமுகமாக தோனியை குத்தி காட்டி பேசியிருக்கிறார் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்.

Advertisement