சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் சற்று மோசமான செயல்பாட்டை தான் காட்டிக் கொண்டிருக்கிறது. எப்போதும் முதல் மூன்று இடங்களுக்குள் நிலைத்து நீடிக்கும் சென்னை அணி தற்போது கடைசி மூன்று இடங்களுக்குள் தள்ளப்பட்டுவிட்டது. 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது சென்னை அணி. இதனால் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை தற்சமயத்திற்கு உறுதிசெய்துள்ளது.
இந்நிலையில் அந்த அணியின் மிகச்சிறந்த பல வீரர்கள் இன்னும் அணிக்கு வெளியே உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று ஒரு விமர்சனம் வந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜொலித்தவர். அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் சமீபத்தில் நடந்து முடிந்த கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
இருப்பினும் அவருக்கு தற்போது வரை ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை.
இந்நிலையில் இம்ரான் தாஹிர் எப்போது விளையாடுவார் என்பது குறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிசுவநாதன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில் : நிச்சயமாக இம்ரான் தாஹிர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். இப்போது அணியில் 2 வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் .
அடுத்து வரும் ஆட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழல் சுழற்பந்து வீச்சுக்கு இயக்குவதாக மாறிவிடும் அப்போது கண்டிப்பாக விளையாடுவார் என்று கூறியுள்ளார் காசிவிசுவநாதன். ஆனால் வெளியில் உட்கார்ந்து இருப்பதை சற்று கடினமான விஷயம்தான்.
இருப்பினும் நாங்கள் ஒரு அணியாக இருப்பதால் எங்களுக்கு அது மனநிறைவைத் தருகிறது என்று தெரிவித்திருக்கிறார் இம்ரான் தாகிர். மேலும் அணிக்காக நான் விளையாடுவதை விட அணியுடன் இருப்பது மகிழ்ச்சி என்று தாஹீரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.