இந்த ஐ.பி.எல் தொடரில் ஜடேஜா சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவாரா ? மாட்டாரா ? – நிர்வாகி அளித்த பதில்

சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் தொடரிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. அதனால் இந்த சீசனில் மீண்டும் நன்றாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் எண்ணத்தில் தீவிர வளர்ப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மும்பைக்கு இடம் மாறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 5 போட்டிகள் மும்பையில் நடைபெற இருப்பதால் மும்பைக்குச் சென்று அங்கேயுள்ள மைதானங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

CSK-1

மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா , புஜாரா , அம்பத்தி ராயுடு, ஜெகதீசன் , சாய் கிஷோர் மற்றும் சில வீரர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை சென்ற நிலையில் ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் ஜடேஜா பயிற்சியில் பங்கு பிறந்த காரணத்தை காசி விஸ்வநாதன் விளக்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய தொடரில் ரவீந்திர ஜடேஜாவுக்கு கட்டைவிரலில் மிகப் பெரிய காயம் ஏற்பட்டது அதனை அடுத்து அவர் சில காலம் ஓய்வு எடுத்துக்கொண்டார். தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடரில் கூட ரவிந்திர ஜடேஜா இடம் பெறாததற்கு அதுவே காரணம். காயம் குறைந்து வரும் நிலையில் ரவீந்திர ஜடேஜா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோக்களை தனது சோசியல் மீடியா வலைதளங்களில் வெளியிடுவார்.

jadeja 1

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா இந்த ஐபிஎல் சீசனில் கண்டிப்பாக ஆடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர் ஆடுவது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று காசி விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

ஜடேஜா தற்போது காயத்தின் சிகிச்சை மற்றும் உடற்தகுதியை சரி செய்ய பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார். அதனால் அவர் குறித்த முடிவு அனைத்தும் அவர் அங்கிருந்து வெளியே வந்தால் மட்டுமே எடுக்கப்படும் என்று காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.