தோனியின் இந்த வேண்டுகோளுக்காக தான் சென்னையில் 5 நாட்கள் பயிற்சியை நடத்தினோம் – காசி விசுவநாதன் தகவல்

CSK-Owner
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பல்வேறு சிக்கல்களை கடந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் உற்சாகம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

ipl

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாய் சென்றடடைந்தது. துபாய் சென்ற சிஎஸ்கே அணி வீரர்கள் 5 நாட்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பின்னர் பயிற்சியில் ஈடு படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.கே வீரர்கள் துபாய் செல்வதற்கு முன்பாக சென்னையில் 5 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

அந்த பயிற்சி முகாமில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, அம்பத்தி ராயுடு, சாவ்லா கரண் ஷர்மா, தீபக் சாஹர் போன்ற முக்கிய வீரர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த பயிற்சியின் போது தான் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இந்த 5 நாட்கள் பயிற்சி குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சிஎஸ்கே அணியின் சிஇஓ காசிவிசுவநாதன் கூறுகையில் :

csk

ஐபிஎல் போட்டிகள் நடைபெற போகிறது என தெரிந்தவுடன் பயிற்சி முகாமை சென்னையில் நடத்துவதற்கு எனக்கு சில தயக்கங்கள் இருந்தன. பயிற்சியை நடத்துவதற்காக கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் பயிற்சி குறித்து யோசிக்க முடியும் மேலும் தோனியிடம் பேச முடியும் என்று நினைத்தேன்.

- Advertisement -

இருப்பினும் பயிற்சி முகாம் குறித்து ஆலோசனை கேட்பதற்காக நான் தோனிக்கு மெசேஜ் அனுப்பினேன். ஆனால் தோனி பயிற்சி விடயம் மிகவும் தெளிவாக இருந்தார். என்னிடம் அவர் சார் நாங்கள் நான்கு முதல் ஐந்து மாதங்களாக கிரிக்கெட் விளையாட வில்லை. அதனால் அணி வீரர்கள் அனைவரும் சென்னையில் ஒன்றுதிரள வேண்டும்.

Raina

நாங்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து பயிற்சி செய்ய வேண்டும் அப்போதுதான் அத்தகைய சூழலை துபாய் சென்ற பிறகும் நாங்கள் கடைப்பிடிக்க உதவும் என்று டோனி கூறினார். அதனாலேயே இந்தப் பயிற்சி முகாமை நடத்தினோம் என்று காசிவிஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement