சி.எஸ்.கே அணியில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பிற்கு இவர் தனது ஆட்டத்தால் பதில் கொடுப்பார் – காசி விஸ்வநாதன்

Kasi
- Advertisement -

இந்த வருட 13 ஆவது ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அட்டவணை நேற்று சொல்லியபடி வெளியிடப்பட்டது. வழக்கம்போல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மோதுகின்றன. இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் உள்ள 54 போட்டிகளில் 10 நாட்களில் மட்டும் இரண்டு போட்டிகள் நடைபெறும்.

CskvsMi

- Advertisement -

வழக்கமாக நடைபெறும் போட்டியில் 7.30 மணிக்கும் இரண்டு போட்டிகள் நடைபெறும் காலத்தில் மதியம் 3.30 மணிக்கு ஒரு போட்டியும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கிறது. முதலில் அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அதனை தாண்டி சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து வெளியேறிவிட்டார். ஹர்பஜன்சிங் சொந்த காரணங்களுக்காக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டார் .

இந்நிலையில் இத்தனை பிரச்சனைகள் எப்படி சமாளிக்கப் போகிறது சென்னை அணி என்பது குறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார் . அவர் கூறுகையில்..

csk 1

சிஎஸ்கே அணி தற்போதும் பலமாகத்தான் இருக்கிறது. இது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. தலைவன் தோனி மிகவும் திறமையான கேப்டன். இது போன்ற பல கடினமான நேரங்களில் ஏற்கனவே நாங்கள் சந்தித்து இருக்கிறோம். தலைவன் தோனி அதனை அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.

csk

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நாங்கள் பயிற்சியையும் தொடங்கிவிட்டோம். தற்போது அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் துடிப்புடன் இருக்கிறார்கள். கேப்டன், பயிற்சியாளர்கள் என அனைவரும் தங்களது தகவல்களை அளித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த வருடமும் ரசிகர்களின் பேராதரவுடன் துபாயிலும் மஞ்சள் நிறத்திற்கு வெற்றிகள் குவியும். சிஎஸ்கே கண்டிப்பாக மிகச் சிறப்பாக விளையாடும் என்று தெரிவித்திருக்கிறார் காசிவிசுவநாதன்.

Advertisement