இந்த 5 நாள் பயிற்சியில் தோனி ஆடினார் தெரியுமா ? – திகைத்து நின்ற சி.எஸ்.கே சிஇஓ

csk
- Advertisement -

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்காக 5 நாள் பயிற்சியினை சென்னையில் மேற்கொண்ட சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பாக தங்களது பயிற்சிகளை முடித்து இன்று மதியம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்தனர். இந்த ஐந்து நாட்கள் பயிற்சி போட்டியை தமிழக வீரரான பாலாஜி தலைமை தாங்கி நடத்தினார்.

Balaji

இந்த பயிற்சி போட்டிகளில் சென்னை அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, ராய்டு, தீபக் சஹர் மற்றும் பியூஸ் சாவ்லா போன்ற சிஎஸ்கே அணி வீரர்கள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சியை மேற்கொள்வதால் காயம் ஏற்படக் கூடாது என்ற காரணத்தினால் சீராகவே அவர்கள் பயிற்சியை செய்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த பயிற்சி குறித்து சென்னை அணியின் சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில் : தோனி இந்த பயிற்சியின்போது பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டார் மேலும் அனைத்து திசைகளிலும் அவர் சிக்ஸர்களை விளாசினார். எப்போதும் போல நிதானமாகவும், உறுதியாகவும், மகிழ்ச்சியுடனும் அவர் காணப்பட்டார்.

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த போது அது அணி வீரர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த ஐந்து நாட்கள் பயிற்சியில் வீரர்கள் முழு உத்வேகத்துடன் முழு பயிற்சியில் ஈடுபடவில்லை ஏனெனில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பயிற்சி செய்வதால் காயயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Dhoni

இதன் காரணமாக இயல்பான பயிற்சியை அவர்கள் மேற்கொண்டார்கள் .மேலும் யுஏஇ சென்ற பிறகு வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பிறகு பயிற்சி பெறுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement