மாற்றி மாற்றி பேசும் சென்னை அணியின் சி.இ.ஓ ? சி.எஸ்.கே வில் என்ன நடக்கிறது ? – விவரம் இதோ

Kasi

இந்த ஆண்டு என்னதான் நடந்ததோ சிஎஸ்கே அணிக்கு ஆரம்பத்திலிருந்து சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். இந்த இரண்டு விடயங்களும் ஆரம்பத்தில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனாலும் அவர்கள் இருவரும் ஐ.பி.எல் தொடர்களில் ஆடுவார்கள் என்பது ஒன்றே ரசிகர்களுக்கு சற்று ஆறுதலான விடயமாக அமைந்தது.

csk 2

அதற்கு அடுத்து அதிர்ச்சியளிக்கும் விதமாக சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சியை முடித்துக்கொண்ட சிஎஸ்கே வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் திரும்பினர். இனிமேலாவது சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டு இந்தத் தொடரில் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளார்கள் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதிலும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் மற்றும் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் பெயர் உறுதிசெய்யப்பட்டது. மேலும் சொந்தப் பிரச்சினை காரணமாக ரெய்னா விலகினார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட பிரச்சினைகளை அவர் விலகினார் என்று பின்னர் தெரிய வந்தது. இப்படி அடுத்தடுத்து பிரச்சனைகள் குவிந்து கொண்டே வர தற்போது சென்னை அணியின் சிஎஸ்கே காசி விஸ்வநாதனும் தனது கருத்தை மாற்றி மாற்றி கூறிவருவது ரசிகர்களிடையே கேள்வி எழுப்பி உள்ளது.

அதாவது சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த 13 பேரும் மீண்டும் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும் அவர்களுக்கு நெகட்டிவ் வந்து விட்டது எனவும் ஒரு தகவலைத் தெரிவித்திருந்தார். இந்த தகவல் வெளியானதிலிருந்து பலரும் இவ்வாறு ஐந்து நாட்களில் அவர்கள் எப்படி குணமடைந்து திரும்பினார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

மேலும் அவர்களுக்கு எந்த வகையில் நீங்கள் சிகிச்சை அளித்தீர்கள் என்பது போல தொடர் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் மற்றொரு புதிய தகவலை விஸ்வநாதன் வெளியிட்டு இருக்கிறார் அந்த தகவலின் படி ஏற்கனவே சென்னை அணியில் பாதிக்கப்பட்டிருந்த 13 பேரை தவிர்த்து மற்ற அனைவருமே பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாக தான் கூறியதாக மாற்றி மாற்றி கூறியுள்ளார்.

CSK-Owner

மேலும் 13 பேர் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மீதம் உள்ள நபர்கள் விரைவில் பயிற்சியில் இறங்குவார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை அளித்துவரும் சிஎஸ்கே அணி நிர்வாகம் குறித்து ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.