- Advertisement -
ஐ.பி.எல்

தோனி என்ன ரோலில் விளையாடணும்னு அவங்க தான் முடிவு செய்யணும் – காசி விஸ்வநாதன் கருத்து

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் இந்த ஆண்டிற்கான 2026 ஐபிஎல் தொடரானது மார்ச் 28-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை விரைவில் பிசிசிஐ அறிவிக்கும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

தோனி முழு தொடரிலும் விளையாடுவார் : காசி விஸ்வநாதன்

இதன் காரணமாக ரசிகர்கள் இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் தற்போது 44 வயதை எட்டியுள்ள அவர் இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதனால் அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் தோனி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரியான காசி விஸ்வநாதன் அவர் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

எதிர்வரும் 2026 ஐ.பி.எல் சீசனின் அனைத்து போட்டிகளிலும் தோனி பங்கேற்பார். ஆனால் அவர் ஒரு பேட்ஸ்மேனாகவா அல்லது விக்கெட் கீப்பராகவா அல்லது இம்பேக்ட் பிளேயராக விளையாடுவாரா? என்பதை அணியின் நிர்வாகம் மட்டுமே முடிவு செய்து அறிவிக்கும். தோனி எந்த ரோலில் விளையாடப்போகிறார் என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளர், நிர்வாகம் ஆகியோரது கலந்துரையாடலுக்கு பிறகு அறிவிக்கப்படும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் கண்டிப்பா இதை நெனச்சி ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பார் – இர்பான் பதான் ஓபன்டாக்

சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளை தமிழ்நாட்டில் மட்டுமே விளையாட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே பிசிசிஐ அட்டவணைக்காகவும் காத்திருக்கிறோம். இம்முறை சிஎஸ்கே அணி இளமையும், அனுபவமும் கலந்த அணியாக இருப்பதால் மிகச் சிறப்பாக தயாராகி வருகிறது என்றும் காசி விஸ்வநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -