மொயின் அலி எந்த கோரிக்கையும் வைக்கல. இது எல்லாமே தவறான தகவல் – சி.எஸ்.கே விளக்கம்

Moeen-ali-2
- Advertisement -

இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சென்னை அணிக்காக முதல் முறையாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி விளையாட இருக்கிறார். அவரை இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 7 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது. இந்நிலையில் சென்னை அணியின் ஒரு ஸ்பான்சராக இருக்கும் எஸ்என்ஜே 10000 மதுபான கம்பெனி அவர்களுடைய லோகோவை சென்னை அணியின் வீரர்கள் விளையாடக்கூடிய உடையில் இணைத்து இருந்தனர்.

moeen ali

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி அந்த சின்னத்தை தனது உடையில் இருந்து எடுக்குமாறு சென்னை அணி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் மொயின் அலி, பெரிதாக மதுபானங்களை விரும்பமாட்டார். அவரைப்போலவே சக இங்கிலாந்து வீரரான ஆடில் ரசீதும் மதுபானங்களை விரும்பமாட்டார். இந்நிலையில் சென்னை அணிக்காக ஆட உள்ள மொயின் அலி, தனது உடையில் மதுபானம் சின்னம் இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று சென்னை அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

மேலும் அதை எடுத்து விடுமாறு தன்னுடைய விருப்பத்தை சென்னை அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். சென்னை அணியும் அவரது விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரது உடையில் இருந்து மட்டும் அந்த சின்னத்தை நீக்கியுள்ளது. மொயின் அலியின் இத்தகைய செயல் பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து ஆதரவை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி உள்ள மொயின் அலி, 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

Fleming

நேற்று வெளியான இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Moeen ali 1

மொயின் அலியிடமிருந்து எந்த கோரிக்கையையும் அணி நிர்வாகத்திற்கு வரவில்லை. சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்திகள் அனைத்தும் போலியானது. அவர் எந்தவொரு லோகோவையும் நீக்க வேண்டும் என்று இதுவரை எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை. இதெல்லாம் தவறாக பரப்பப்பட ஒரு வரும் ஒரு வதந்தி என அவர் உறுதிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement